பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

By Ravichandran

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை தரம் அடிப்படையிலும், தொழில்நுட்ப ரீதியிலும் மேம்படுத்தி கொண்டே இருக்கின்றனர்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அடுத்ததடுத்து இந்தியாவில் ஏராளமான பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். பஜாஜ் நிறுவனம், 2016 மற்றும் 2017-ல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள பைக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கம்யூட்டர், ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் ஆகிய 3 பிரிவுகளிலும், தங்களின் சந்தை பங்கினை உயர்த்தி கொள்ள முயற்சிக்கின்றனர்.

அனைத்து பைக் செகம்ன்ட்டிலும், மிக அதிக அளவில் தடம் பதிக்க, இந்த 2016 மற்றும் 2017-ல் ஏராளமான பைக்குகளை அறிமுகம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பஜாஜ் அவென்ஜர்;

பஜாஜ் அவென்ஜர்;

பஜாஜ் அவென்ஜர், அறிமுகம் செய்யப்படும் போது, அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இதனால், பஜாஜ் நிறுவனம், இந்த பஜாஜ் அவென்ஜர் பைக்கிற்கு 400 சிசி இஞ்ஜின் பொருத்தி, இதற்கு கூடுதல் திறன் வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதே இஞ்ஜின் தான், வெளியாக இருக்கும் பல்சர் சிஎஸ்400 பைக்கிலும் பொருத்தப்படும். 150 சிசி மற்றும் 220 சிசி கொள்ளளவு கொண்ட நிகழ் தலைமுறை பஜாஜ் அவென்ஜர், நல்ல அளவில் விற்பனை ஆகியுள்ளது. இது எக்சிகியூட்டிவ் கம்யூட்டர் செகம்ன்ட்டில் மக்களின் எதிர்பார்ப்பை பெரும் அளவில் பூர்த்தி செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

அவென்ஜர் 400, அட்வென்ச்சர் பயணங்களுக்கான ஆர்வத்தை பெரும் அளவில் அதிகரிக்கும். மேலும், இது நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாகவும் திகழும். அவென்ஜர் 400, 375 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 43 பிஹெச்பியையும், 35 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

பஜாஜ் நிறுவனம், கேடிஎம் நிறுவனத்துடன் கூட்டாளியாக இருப்பதால், கேடிஎம் பிளாட்ஃபார்ம் மற்றும் தொழில்நுட்பங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை ; 1.50 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; 2016 இறுதி

2) பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400 (எஸ்எஸ்400);

2) பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400 (எஸ்எஸ்400);

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக், நடுத்தர விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஆர்எஸ் வேரியன்ட்டில் கூடுதல் வலு சேர்க்க விரும்புகிறது. ஆர்எஸ் என்பது ரேலி ஸ்போர்ட் என்பதை குறிக்கிறது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பல்சர் எஸ்எஸ்400 கான்செப்ட் பைக் காட்சிபடுத்தப்ட்டது. இந்த பல்சர் எஸ்எஸ்400 கான்செப்ட், அதன் இளைய இணை பைக்கான பல்சர் ஆர்எஸ்400 பைக்கை போன்றே காட்சி அளித்தது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்400 பைக், 375 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும். 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்ட இதன் இஞ்ஜின், 43 பிஹெச்பியையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை ; 1.50 லட்சம் ரூபாய் - 2 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; 2016 இறுதி / 2017 ஆரம்பம்

3) பஜாஜ் பல்சர் சிஎஸ்400;

3) பஜாஜ் பல்சர் சிஎஸ்400;

பஜாஜ் நிறுவனம் வழங்க உள்ள பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கில், சிஎஸ் என்பது க்ரூஸர் ஸ்போர்ட்ஸ் ரகத்தை குறிக்கிறது. பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், பஜாஜ் பிராண்டில் புதிய ரசத்தை கொண்டு வருவதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்படும் பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

பஜாஜ் நிறுவனம், இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ் 400 பைக் மூலம், ஸ்போர்ட்ஸ் செகம்ன்ட்டிலும் தங்ககளது தடத்தை விரிவுபடுத்தி கொள்ள உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக், அதே 375 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த 375 சிசி இஞ்ஜின் தான், பஜாஜ் நிறுவனத்தின் அனைத்து 400 சிசி பைக்குகளுக்கும் அடிப்படை இஞ்ஜினாக விளங்க உள்ளது. இந்த இஞ்ஜின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

க்ரூஸர் ஸ்போர்ட்ஸ் ரகத்தின் ஸ்டைல் மற்றும் நிலைப்பாட்டை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் மூலம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஒரு புதிய செகம்ன்ட்டையே உருவாக்க உள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை ; 1.50 லட்சம் ரூபாய் - 1.75 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; ஜூலை - ஆகஸ்ட் 2016

4) பஜாஜ் பல்சர் சிஎஸ்200;

4) பஜாஜ் பல்சர் சிஎஸ்200;

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழக்கமாக தங்களின் மாடல்களை, உயர்ந்த டிஸ்பிலேஸ்மன்ட் மற்றும் குறைந்த டிஸ்பிலேஸ்மன்ட் உடன் வழங்குகின்றனர். அந்த வகையில், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கும் அதே போன்ற கவனிப்பு பெறுகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், வழங்கும் இந்த குறைந்த டிஸ்பிலேஸ்மன்ட் கொண்ட பல்சர் சிஎஸ்200 பைக், அதன் மூத்த இணை பைக்கை காட்டிலும், மெல்லியதாகவும், பளபளப்பானதாகவும் இருக்கும்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் சிஎஸ்200 பைக், பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் உள்ளது போன்றே 199.5 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும். 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும் இதன் இஞ்ஜின், 24.3 பிஹெச்பியையும், 18.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை ; 1.2 லட்சம் ரூபாய் - 1.5 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; 2016 இறுதி / 2017 ஆரம்பம்

5) பஜாஜ் பல்சர் 150 என்எஸ்;

5) பஜாஜ் பல்சர் 150 என்எஸ்;

இந்திய வாகன சந்தைகளில், 150சிசி செகம்ன்ட் மிகவும் பரபரப்பு நிறைந்த செகம்ன்ட்டாக இருக்கும். பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இலகுவான ப்ளாட்ஃபார்ம் சேஸி கொண்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 150 என்எஸ், 149.5 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும். 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும் இதன் இஞ்ஜின், 16.8 பிஹெச்பியையும், 13 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக்கின் அறிமுகமே, 150சிசி செகம்ன்ட்டில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதாக தான் உள்ளது. பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக், 150சிசி செகம்ன்ட்டின் தேவையை சரியான விதத்தில் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை ; 70,000 ரூபாய் - 80,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; 2016 இறுதி

6) பஜாஜ் பல்சர் 180 என்எஸ்;

6) பஜாஜ் பல்சர் 180 என்எஸ்;

பஜாஜ் பல்சர் 180 என்எஸ், பஜாஜ் பல்சர் 150 என்எஸ் பைக் மாடலை மையமாக வைத்து தயாரிக்கபடுகிறது.

பஜாஜ் பல்சர் 180 என்எஸ், அதே டிசைன் மற்றும் பெரிமீட்டர் ஃபிரேம் கொண்டிருக்கும். இது அளவில் மிகவும் சிறியதாக இருக்கும்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

பஜாஜ் பல்சர் 180 என்எஸ் பைக், 180 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த பைக், 19-21 பிஹெச்பியையும், 16 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை ; 75,000 ரூபாய் - 85,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; 2016 இறுதி

7) 2016 பஜாஜ் பிளாட்டினா;

7) 2016 பஜாஜ் பிளாட்டினா;

போட்டி நிறைந்த கம்யூட்டர் செகம்ன்ட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 2016 பஜாஜ் பிளாட்டினா பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது.

2016 பஜாஜ் பிளாட்டினா பைக், புதிய வண்ண தேர்வுகளுடன், புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பாடி பேனல்களுடன் வெளியாக உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யும் 7 பைக்குகள் - முழு விவரம்

2016 பஜாஜ் பிளாட்டினா பைக், 102 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும். இதன் இஞ்ஜின், 8 பிஹெச்பியையும், 8.6 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

எனினும், இது நிகழ்கால தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை ; 43,000 ரூபாய் - 45,000 ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; ஜூலை - செப்டம்பர் 2016

Most Read Articles
English summary
Bajaj is planning to consolidate its market share in all three categories called as Commuter, Sports and Executive. Bajaj Auto is upbeat about their product lineup, its technology and quality as they are becoming more stronger. Bajaj plans to enter every bike segment to grab bigger pie in market share. To know about list of new bikes to be launched in 2016 and 2017 by Bajaj, check here...
Story first published: Thursday, June 16, 2016, 12:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X