வெஸ்பா 946 எம்பீரியோ அர்மானி ஸ்கூட்டர் இந்தியாவில் அக்டோபர் 25-ல் அறிமுகம்

வெஸ்பா நிறுவனம் தயாரித்து வழங்கும் முற்றிலும் ஸ்பெஷலான 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், இந்தியாவில் அக்டோபர் 25-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்..

Written By:

வெஸ்பா நிறுவனம் தயாரித்து வழங்கும் முற்றிலும் ஸ்பெஷலான 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், இந்தியாவில் அக்டோபர் 25-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி. பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன.

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர் அறிமுகம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

946 எம்போரியோ அர்மானி...

இத்தாலியை சேர்ந்த வெஸ்பா நிறுவனம் தயாரிக்கும் 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தபட்டது. இது வழக்கமான ஸ்கூட்டர் அல்ல. இதன் ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் வழங்கும் மாடல் ஆகும்.

ஸ்டைல்;

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், நவீன உபகரணங்கள் உடைய ரெட்ரோ ஸ்டைல் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். இது, 2 உலகங்களின் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இது நவீன உதிரி பாகங்களுடன், புராதன ஸ்டைல் அம்சங்கள் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டருக்கு சிங்கிள் சிலிண்டர் உடைய 125 சிசி ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 11.84 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 10.33 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

பிற அம்சங்கள்;

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டருக்கு 12-இஞ்ச் அல்லாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

விற்கப்படும் விதம்;

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

தெளிவற்ற நிலை;

தற்போதைய நிலையில், வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், இந்தியாவில் லிமிட்டெட் எடிஷன் மாடலாக இந்தியாவில் வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் வெளியாகவில்லை.

அறிமுகம்;

தற்போதைய தகவல்கள் படி, வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், இந்தியாவில் அக்டோபர் 25-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விலை;

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டர், ஏறக்குறைய 7.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #வெஸ்பா #vespa
Story first published: Tuesday, October 18, 2016, 13:08 [IST]
English summary
Vespa would launch an extremely Special Scooter called Vespa 946 Emporio Armani scooter in India on October 25. This is retro styled scooter with modern equipment. 946 Emporio Armani scooter from Vespa will be imported as Completely Built Unit (CBU) and sold. It is unclear whether, this 946 Emporio Armani is limited edition for India or not. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos