அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய யமஹா ஸ்கூட்டர்!

Written By:

எளிதான போக்குவரத்து சாதனமாக விளங்கும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு வளரும் பொருளாதார நிலை கொண்ட நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார் மார்க்கெட்டில் கிராஸ்ஓவர் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கான வரவேற்பு எப்படி அதிகரித்ததோ, அதபோன்று ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் இப்போது புதிய டிரென்ட் உருவாகி வருகிறது.

அதாவது, பைக்குகளில் இருக்கும் சில சிறப்பம்சங்களை சேர்த்து வடிவமைக்கப்படும் மோட்டோஸ்கூட்டர் எனப்படும் கலப்பின வகை ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு இப்போது மவுசு கூடி வருகிறது. சமீபத்தில் இந்தியா வந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் இதற்கு சாட்சி. இந்த நிலையில், வளரும் நாடுகளுக்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் புதிய மோட்டோஸ்கூட்டர் ரக மாடல் ஒன்றை யமஹா அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஆம், யமஹா NVX150 என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலின் டீசரை யமஹா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த ஸ்கூட்டர் தற்போது இறுதிக் கட்ட சோதனையில் இருக்கிறது. சமீபத்தில் இந்தோனேஷியாவில் வைத்து சோதனை செய்யப்பட்ட ஸ்கூட்டரின் படங்கள் முதல்முறையாக வெளியாகி, யமஹா பிரியர்களின் ஆவலை கிளறியிருக்கிறது.

இந்த ஸ்பை படங்களில் யமஹாவின் வழக்கமான டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ரொம்பவே வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. குறிப்பாக, இதன் ஹெட்லைட் டிசைன் யமஹா ஆர்3 பைக்கை போன்றே இரட்டை ஹெட்லைட் மாடலாக இருக்கிறது.

முன்புறத்தில் ஸ்கூட்டர் போன்று தோற்றமளித்தாலும், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் சிறிய பைக் போன்று காட்சியளிக்கிறது. இரண்டு ஷாக் அப்சார்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், மிக ஸ்டைலான ஸ்கூட்டர் மாடலாக காட்சி தருகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என நம்பலாம்.

இந்த ஸ்கூட்டர் பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பதுடன் வசதிகளிலும் ஸ்மார்ட். இந்த ஸ்கூட்டரில் 5.8 இன்ச் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. மேலும், பட்டன் மூலமாக பெட்ரோல் டேங்க்கை திறக்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இருக்கையின் கீழே 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. இதுவும் மிகச் சிறந்த வசதியாக இருக்கும்.

 

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் போன்றே இந்த ஸ்கூட்டரிலும் 14 இன்ச் டயர்கள் உள்ளன. 144மிமீ அகலமுடைய டயர்களும் இந்த ஸ்கூட்டருக்கு கம்பீர உணர்வை தருகிறது.

யமஹா என்எம்-எக்ஸ் ஸ்கூட்டரில் இருக்கும் பல சிறப்பம்சங்களை இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கும். அதேநேரத்தில், அதற்கு குறைவான விலையில் நிலைநிறுத்தப்படும்.

யமஹா என்எம்-எக்ஸ் ஸ்கூட்டரில் இருக்கும் அதே 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 14.4 என்எம் டார்க்கையும் வழங்கும்.

முன்புறத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர சிறப்பம்சமாக இடம்பெற்றிருக்கும்.

இந்தோனேஷியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கருதப்படுகிறது. அப்படி அறிமுகம் செய்யப்பட்டால், நிச்சயம் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு கடுமையான போட்டியை கொடுக்கும்.

Source

Story first published: Friday, October 14, 2016, 10:32 [IST]
English summary
Japanese manufacturer Yamaha's new NVX 150 scooter spotted testing in Indonesia. The NVX 150 is scheduled to launch there by the end of this year.We can expect Yamaha to launch this 150cc sports scooter in India soon.
Please Wait while comments are loading...

Latest Photos