ஆட்டோ ஹெட்லைட் வசதியுடன் அறிமுகமானது யமஹா ஆர்15 பைக்!

Written By:

இந்திய இளைஞர்களின் ஸ்போர்ட்ஸ் பைக் கனவை பட்ஜெட் விலையில் கச்சிதமாக பூர்த்தி செய்து வரும் மாடல் யமஹா ஆர்15. அவ்வப்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதற்கான அம்சங்களுடன் அப்டேட் செய்யப்ப்டடு வருகிறது.

இந்த நிலையில், யமஹா ஆர்15 பைக்கில் ஆட்டோ ஹெட்லைட் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நிரந்தர பாதுகாப்பு அம்சம்

ஆட்டோ ஹெட்லைட் வசதியானது யமஹா ஆர்15 வெர்ஷன் 2.0 மாடலிலும், ஆர்15 எஸ் மாடலிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ ஹெட்லைட்

அதாவது, வண்டியின் இக்னிஷன் சுவிட்சை சாவி போட்டு ஆன் செய்தது முதல் இக்னிஷன் சுவிட்சை ஆஃப் செய்யும் வரை, ஹெட்லைட் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். மேலும், ஹெட்லைட்டை ஆன் செய்து ஆஃப் செய்வதற்கான சுவிட்ச் இருக்காது.

விபத்து தவிர்க்கப்படும்

பொதுவாக பல வெளிநாடுகளில் இந்த வசதி பொதுவானதாக இருக்கிறது. அதாவது, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது பிற வாகன ஓட்டிகளின் கவனத்தை பெறுவதற்காக இந்த வசதி கொடுக்கப்படுகிறது. விபத்துக்களை குறைக்கும் என்பது கருத்தாக உள்ளது.

மத்திய அரசு திட்டம்

இந்த ஆட்டோ ஹெட்லைட் ஆப்ஷனை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருசக்கர வாகனங்களில் சேர்க்க மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், தற்போது இந்த வசதியை இருசக்கர வாகன நிறுவனங்கள் அளிக்க துவங்கியிருக்கின்றன.

நிறுவனங்கள் ஆர்வம்

முதல்முதலாக கேடிஎம் ஆர்சி பைக் மாடல்கள் இந்த ஆட்டோ ஹெட்லைட் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அடுத்ததாக, ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் யமஹா மாடல்

தற்போது யமஹா நிறுவனமும் இந்த வசதியுடன் முதல் பைக் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. விரைவில் அனைத்து மாடல்களிலும் இந்த ஆட்டோ ஹெட்லைட் வசதியை யமஹா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை விபரம்

ஆட்டோ ஹெட்லைட் வசதியுடன் வந்திருக்கும் புதிய யமஹா ஆர்15 பைக் மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. யமஹா ஆர்15 வெர்ஷன் 2.0 மாடல் ரூ.1.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஆர்15 எஸ் மாடல் ரூ.1.15 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

English summary
Yamaha launches the YZF-R15 Version 2.0 and the R15 S in India with the auto headlight on feature.
Story first published: Thursday, December 1, 2016, 16:32 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos