3வது முறையாக சாகச பயிற்சி பள்ளியுடன் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் ஒப்பந்தம்

Written by: Azhagar

பிரிட்டனின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இந்தியக் கிளை, கலிஃபோர்னியா சூப்பர்பைக் ஸ்கூலுடன் தனது ஒப்பந்தத்தை 3வது முறையாக நீடித்துக்கொண்டுள்ளது. பைக் சாகசங்களுக்கான பயிற்சி கூடமாக இயங்கி வரும் CSSற்கு (கலிஃபோர்னியா சூப்பர்பைக் ஸ்கூல்) இந்த ஒப்பந்த நீடிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது பைக்குகளை ரேஸ், சாகசமான பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு அதற்கு ஏற்றவாறான வடிவமைப்புகளில் தயாரித்து வருகிறது. இதனாலேயே தற்போது சாகசம், ரேஸ் என்றால் பலரும் விரும்புவது டிரையம்ப் பைக்குகள் தான்

மோட்டார் பைக் சாகசங்களுக்கான பல பயிற்சி கூடமிருந்தாலும், அதில் உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே நிறுவனமாக இன்றும் மதிப்புபெற்று வருவது கலிஃபோர்னியா சூப்பர்பைக் ஸ்கூல். 1980ம் ஆண்டில் கீத் காட் என்ற அமெரிக்கரால் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி பள்ளி, உலகளவில் 27 நாடுகளில் கிளை பரப்பி உள்ளது.

பைக் சாகசங்களை பாதுகாப்புடனும், கவனத்தோடும் கற்றுத்தரும் CSS, 2010ம் ஆண்டில் இந்தியாவில் பயிற்சி பள்ளியை தொடங்கியது. அதற்கு சரியான இடமாக சென்னையை தேர்வு செய்து, இந்தியளவில் பலருக்கும் அங்கே பைக் சாகச பயிற்சிகளை கற்றுத்தந்து வருகிறது.

சென்னை MMSC ட்ராக்கில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இயங்கி வரும் CSSலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். இந்தியளவில் பெரும்வாரியான மக்களிடம் டிரையம்ப் மோட்டார் பைக்குகள் சென்றடைந்ததிற்கான காரணம் CSSதான் என்பதையும் அந்நிறுவனம் நன்கு உணர்ந்திருக்கிறது.

சாகசத்தையும், பயணத்தையும் ஒன்றாக இணைக்கும் இந்த ஒப்பந்த நீடிப்பு குறித்து பேசிய டிரையம்ப் மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் விமல் சும்லே "CSSன் வளர்ச்சியால் பைக் சாகசத்திற்கான ஆர்வம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பவர்ஃபுல்லான பைக்கை, பாப்புலராகியிருப்பதில் CSSன் பங்கு அதிகம்" என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து சந்தையில் டிரையம்ப் மோட்டார் பைக்குகளுக்கான தேவையை அதிகரிப்பதில் அந்நிறுவனம் முழு மூச்சோடு இறங்கியுள்ளது. இதில் பைக் மற்றும் ரைடரின் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களை கட்டமைப்பது குறித்த திட்டங்களையும் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் நிர்வாக இயக்குனர் விமல் சும்லே தெரிவித்திருக்கிறார்.

பழங்கால கிளாசிக் லுக்குடன் மார்டனாக வலம் வரும் பைக்குகளை பார்க்கவேண்டுமா? ட்ரம்ப் போனவெல்லி பாபர் வண்டிகளின் புகைப்படங்களை கீழே காணுங்கள்

Story first published: Wednesday, March 8, 2017, 18:56 [IST]
English summary
Triumph Motorcycles India announced their partnership with California Superbike School for the third time in a row.
Please Wait while comments are loading...

Latest Photos