இந்தியாவில் விரைவில் வெளியாகும் கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிள்

Written By:

கவாஸாகி நிறுவனத்தின் புதிய 2017 இசட் 1000 மோட்டர் சைக்கிள் வரும் 22ம் தேதி வெளிவருகிறது. மேம்படுத்தப்பட்ட மாடலில் வடிவமைப்பு, நிறம், வாகனத்தின் கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய இசட் 1000 பைக்கில் இருந்த அதே எஞ்சின் தான் மேம்படுத்தப்பட்டுள்ள மாடலிலும் இடம்பெற்றுள்ளது. அதனால் செயல்திறனில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.

ஃபோர் ஸ்ட்ரோக், இன்-லைன் ஃபோர் மோட்டார் கொண்ட 2017 கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிளின் எஞ்சின், 140 பி.எச்.பி பவர் மற்றும் 111 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மேலும் இந்த மாடலில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எஞ்சின் பி.எஸ். 4 தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அலுமினியாத்தால் உருவாக்கப்பட்ட ஹேண்டில் பார், எல்.இ.டி விளக்குகள், பார்வையை மட்டுப்படுத்தாத கண்ணாடிகள், எல்.சி.டி டிஸ்பிளே ஆகியவற்றுடன், ஆபத்துக்காலத்தில் தானாக இயங்கக்கூடிய பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை 2017 கவாஸாகி இசட் 1000 பைக்கில் உள்ளன.

சர்வதேச மார்கெட்டிற்காக கவாஸாகி வெளியிட்ட இசட் 1000 ஆர் மாடல் மோட்டார் சைக்கிள் புதிய நிறம், பிரம்போ நிறுத்த அமைப்பு கொண்ட உறுதியான உயர் கூறுகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த தொழில்நுட்பம் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. அந்த கான்சப்ட் தற்போது இசட் 1000 மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பவர் மற்றும் ஆற்றலில் எதிர்பாராத அளவில் கவாஸாகி இசட் 1000 பைக் செயல்திறனை வழங்கும்.

 

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இசட் 1000 மோட்டார் சைக்கிளின் விலையில், சர்வதேச அளவில் இந்த புதிய மேம்படுத்த மாடலும் விற்பனை ஆகவுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதனுடைய ஆரம்ப விலை ரூ.12.87 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும், 2017 கவாஸாகி இசட் 1000 மோட்டார் சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ.13 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடலின் சகோதரனாக பார்க்கப்படும் கவாஸாகி இசட் 900 பைக் ரூ.9 லட்சம் விற்பனை விலையில் இந்தியாவில் சமீபத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி நிறுவனத்தின் புதிய வரவாக மேம்படுத்தப்பட்ட இசட் 1000 மோட்டார் சைக்கிள் இம்மாதம் 22ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் சூசிகி நிறுவனத்தின் ஜி.எஸ்.எக்ஸ்-எஸ் 1000 மோட்டார் சைக்கிளுக்கு சந்தையில் நேரடி போட்டியை உருவாக்கவுள்ளது.

மேலும்... #கவாஸாகி #kawasaki
Story first published: Saturday, April 15, 2017, 11:08 [IST]
English summary
The new Kawasaki Z1000 has the same engine and power similar to the outgoing model. But it gets a re tuned ECU for more power and torque. check for details...
Please Wait while comments are loading...

Latest Photos