சுசுகி ஜிக்சர்2017, ஜிக்சர் எஸ்எஃப், ஆக்சஸ்125 மாடல் பைக்குகள் அறிமுகம்

Written By:

ஜப்பானைச் சேர்ந்த சுசுகி நிறுவனம் 2017 ஜிக்சர், ஜிக்சர் எஸ்எஃப், ஆக்சஸ்125 ஆகிய மாடல் பைக்குகளை பிஎஸ்4 தர மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி உருவாக்கப்பட்ட இஞ்சின்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் தானியங்கி முகப்பு விளக்குகளுடன் வெளிவருகிறது.

2017 ஜிக்சரில் புதிய தோற்றம் தரும் ஸ்போர்ட்டி பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் டேங்கில் ஜிக்சர் லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள கிளியர் லென்ஸ் எல்ஈடி விளக்கு அழகை மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஜிக்சர்2017ன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் கருப்பு - சிவப்பு, கருப்பு - நீலம் மற்றும் மெட்டாலிக் கருப்பு - நீலம் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும். இதே போல இதன் டிரம் பிரேக் வேரியண்டில் கருப்பு வண்ணம் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கிறது.

ஜிக்சர்2017 ரியர் டிஸ்க் வேரியண்ட் பைக் ரூ.80,528 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கும். இதே போல இதன் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ. 77,452 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும் கிடைக்கும்.

புதிய 2017 சுசுகி ஜிக்சர் எஸ்எஃப் மாடலில் கவர்ச்சிகரமான புதிய ஸ்போர்ட்டி பாடி கிராஃபிக்ஸ் உள்ளது. இது மெட்டாலிக் நீலம், கருப்பு மற்றும் பேர்ல் சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும்.

2017 சுசுகி ஜிக்சர் எஸ்எஃப் எஃப்ஐ மாடல், மெட்டாலிக் நீலம், கருப்பு மற்றும் மெட்டாலிக் மேட் கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். 2017ஜிக்சர் எஸ்எஃப் மாடல் ரூ.89,659 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும், 2017 சுசுகி ஜிக்சர் எஸ்எஃப் எஃப்ஐ மாடல் பைக் ரூ.93,499 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும் கிடைக்கும்.

ஜிக்சர் மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் மாடல்களில் காற்றால் குளிர்விக்கப்படும், ஒற்றை சிலிண்டருடன் கூடிய 154.9 சிசி எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இது, அதிகபட்சமாக 14.5 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

சுசுகியின் மற்றொரு அறிமுகமாக அதன் ஸ்கூட்டி மாடலான 2017ஆக்சஸ்125 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கிடைக்கக்கூடிய நீலம், சிவப்பு, கிரே, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களுடன், தற்போது கூடுதலாக மெட்டாலிக் சில்வர் வண்ணத்திலும் புதிய ஆக்சஸ் கிடைக்கிறது.

ஆக்சஸ்125 மாடலின் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.57,615 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும், டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.54,302 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும் கிடைக்கிறது.

ஆக்சஸ்125 ஸ்கூட்டர் மாடலில் காற்றால் குளிர்விக்கக்கூடிய, ஒற்றை சிலிண்டருடன் கூடிய 124 சிசி எஞ்சின் உள்ளது,சிவிடி ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட இது, அதிகபட்சமாக 8.5 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களும், வரும் மார்ச் 31க்குள் பிஎஸ்4 தர மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கூடிய எஞ்சின்கள் பொருத்தியிருக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யமஹா சமீபத்தில் அறிமுகப்படுத்திய 250 சிசி மாடலான எஃப்இசட்25 பைக்கின் படங்கள்:

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Suzuki has launched its 2017 Gixxer, Gixxer SF and Access 125 with BS-IV compliant engine, AHO and exciting new colours.
Please Wait while comments are loading...

Latest Photos