பிஎஸ் 4 எஞ்சின் கொண்ட பஜாஜ் சிடி100 பைக் ரூ.29,988ல் விற்பனைக்கு அறிமுகம்

பி.எஸ். 4 எஞ்சின் மற்றும் தானியங்கி முகப்பு விளக்கு தொழில்நுட்பம் கொண்ட பஜாஜ் சிடி100 மோட்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது

Written By:

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சமீபத்தில் மத்தியரசு அறிவிப்பின் படி பி.எஸ். 4 எஞ்சின் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தானியங்கி முகப்பு விளக்குகள் (AHO) ஆகியவற்றை கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று வேவ்வேறு மாடலில் இந்த புதிய பஜாஜ் சிடி100 பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. சிடி100 வரிசையில் ஒரு பைக்கின் முகப்பு விளக்கு வட்ட வடிவத்திலும், மற்றொன்று பழைய முறையிலான முகப்பு அமைப்பை பெற்றிருக்கும். இதே வரிசையில் மற்றொரு மாடலில் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய பஜாஜ் சிடி100 மாடல்கள் மற்றும் விற்பனை விவரம். 

மாடல்கள் விலைப்பட்டியல் (டெல்லி)
சிடி100பி ரூ. 29,988 
சிடி100 ரூ. 35,389 
சிடி100 (அலாய் வீல்கள்) ரூ. 38,981 

99.27சிசி கொண்ட பஜாஜ் சிடி100 மோட்டார் சைக்கிளின் எஞ்சின் 8.1 பிஎச்பி பவர் மற்றும் 8.05 என் எம் டார்க் திறனை வழங்கும். இதில் 4- ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 90 கிலோ மீட்டர் ஒருமணி நேரத்தில் அடையக்கூடிய ஆற்றல் பஜாஜின் புதிய சிடி100 மோட்டார் சைக்கிளில் உள்ளது.

டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் கொண்ட சிடி 100 பைக்கின் பின் சக்கரங்களில் ட்வின் ஷாக் அப்ஸபர் அமைப்பு உள்ளது. மேலும் வண்டியின் இரு சக்கரங்களிலுமே 110மிமி அளவு கொண்ட பிரேக் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

அலாய் வீல்கள் கொண்ட சிடி100 பைக் மாடல் 108 கிலோ கிராம் வரை தாங்கும், அதுவே ஸ்டீலினால் செய்யப்பட்ட சக்கரங்கள் கொண்ட சிடி 100 மாடல்கள் கூடுதலாக் ஒரு எடையை தாங்கும் திறன் பெற்றவை.

ஃபிளேம் ரெட் மற்றும் எபானி பிளாக் என இருவேறு வண்ணங்களில் பரவலாக கிடைக்கும் நிலையில் பாஜாஜ் சி.டி.100 பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் எபானி பிளேக் நிறத்தில் விருப்பட்டால் நீலம் மற்றும் சிவப்பு மட்டும் பயன்படுத்தப்பட்ட தோற்றத்திலும் இந்த மாடல் பைக்குகள் விற்பனைக்கு வரும்.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Bajaj CT100 compliant with BS-IV Norms launched in India. The new Bajaj CT100 series of motorcycles also sport the AHO safety feature.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK