பஜாஜ் பைக் வாங்க இதுவே சரியான நேரம்: அனைத்து மாடல்களுக்கும் விலை குறைப்பு அறிவிப்பு..!!

Written By:

இந்தியாவில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலாவதை முன்னிட்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தற்போது பஜாஜ் நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் மீதும் விலை குறைப்பு செய்து அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் எரிக் வாஸ் கூறுகையில், பொறுப்புள்ள ஒரு நிறுவனமாக விளங்கும் பஜாஜ், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் அடையும் பலன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலாவதற்கு முன்னதாகவே விலை குறைப்பை அறிவித்த முதல் இருசக்கர வாகன நிறுவனம் பஜாஜ் ஆட்டோ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பஜாஜ் நிறுவனத்தின் அனைத்து மாடல் பைக்குகளின் விலையிலும் ரூ.4500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. (குறிப்பிட்ட மாடல் மற்றும் மாநிலத்தை பொறுத்து விலை வேறுபாடு இருக்கலாம்)

இந்த விலை குறைப்பு ஜூன் 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஜிஎஸ்டி அமலான பின்னர் ஆன் ரோட் விலையில் எந்த மாதிரியான மாற்றம் இருக்கும் என்பதை அந்நிறுவனம் இன்னும் விளக்கவில்லை.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு அறிவிப்பின் காரணமாக இதர நிறுவனங்களும் இதை பின்பற்றி விலை குறைப்பை அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Read in Tamil about bajaj cuts down prices of all models as effect of gst.
Please Wait while comments are loading...

Latest Photos