புதிய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகிறது!

Written By:

கடந்த தசாப்தம் வரை இந்தியர்களின் மத்தியில் மிக நெருக்கமான பிணைப்பை கொண்டிருந்த ஸ்கூட்டர் மாடல் பஜாஜ் சேட்டக். பலரின் அந்தஸ்தின் சின்னமாக விளங்கிய இந்த ஸ்கூட்டர், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் வரவால் மதிப்பு இழந்தது.

மேலும், பைக்குகள் மீதான மோகமும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இருக்கும் வலுவான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் சேட்டக் ஸ்கூட்டரை களமிறக்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பழைய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரில் இடது கையில் கியர் மாற்றும் அமைப்பும், வலது கால் மூலமாக பின் சக்கர பிரேக்கை கட்டுப்படுத்தும் நுட்பமும் கொண்டிருந்தது. இது ஓட்டுபவருக்கு கூடுதல் சிரமத்தை தருவதாக இருந்தது. இவற்றை களைந்து முற்றிலும் புதிய மாடலாக அறிமுகமாக இருக்கிறது புதிய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்.

சேட்டக் என்பது இந்தியர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டதால், அந்த பெயரை பயன்படுத்த பஜாஜ் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், முற்றிலும் புதிய டிசைனில் மாடர்ன் ஸ்கூட்டராக புதிய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய எஞ்சின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் புதிய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் வருகிறது. 125சிசி அல்லது 150சிசி எஞ்சின் பயன்படுத்தப்படும். இதன்மூலமாக, சக்திவாய்ந்த மாடலாகவும் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய பஜாஜ் சேட்டக் வருகிறது.

இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட ப்ரேம், புதிய சஸ்பென்ஷன் அமைப்பு, பிரேக் சிஸ்டம், நவீன இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஏற்கனவே, இந்த ஸ்கூட்டரின் டிசைன், தொழில்நுட்ப அம்சங்களுக்கான காப்புரிமைக்கு பஜாஜ் ஆட்டோ விண்ணப்பித்துவிட்டது. இந்த நிலையில், தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜுபிடர் உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு இந்த புதிய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பெயரில் மட்டுமே பழசாக இருக்கும். பிராண்டு நியூ ஸ்கூட்டர் மாடலாக புதிய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் வருகிறது. இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

புதிய பஜாஜ் டோமினார் பைக்கின் படங்கள்!

புதிய பஜாஜ் டோமினார் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

Story first published: Saturday, January 21, 2017, 12:30 [IST]
English summary
Bajaj TO Relaunch New Chetak Scooter In 2017.
Please Wait while comments are loading...

Latest Photos