ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் சரித்திரத்தை தாங்கி வரும் பஜாஜ் வி12 பைக்கின் புதிய வேரியண்ட் அறிமுகம்..

Written By:

பஜாஜ் நிறுவனத்தின் வி15 மோட்டார்சைக்கிள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையின் அதன் மாடலை அடிப்படையாகக் கொண்ட வி12 பைக்கை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்.

இந்த வி சீரீஸ் பைக்குகளை மிகவும் முக்கியமான வரலாற்று பின்னணி கொண்டவையாக பஜாஜ் நிறுவனம் தயாரித்தது.

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல் என்ற பெருமை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் இரும்பு உலோகங்களை பயன்படுத்தி இந்த மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் மிகவும் பிரபலமாக விளங்கியது ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்.

இந்த சரித்திரத்தை பேணிக்காக்கும் வகையில் அதன் வி சீரிஸ் பைக்குகளின் தயாரிப்பில் கப்பலில் இருந்து உடைக்கப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிசைன் அடிப்படையில் பஜாஜ் வி15 மாடலுக்கும், இப்போது வந்திருக்கும் புதிய வி12 மாடலுக்கும் வித்தியாசங்கள் இல்லை. ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என அனைத்தும் வித்தியாசம் இல்லை

125சிசி கம்யூட்டர் பிரிவில் பஜாஜ் வி12 பைக் இதர நிறுவனங்களுக்கு கடும் போட்டியளித்து வருகிறது. என்றாலும் இதில் டிஸ்க் பிரேக் இல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்ட பஜாஜ் நிறுவனம் தற்போது வி12 பைக்கின் முன்பக்க டிஸ்க் பிரேக் கொண்ட புதிய வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வேரியண்ட் நடப்பு வி12 பைக்கை விட 3000 ரூபாய் கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என்று தெரியவருகிறது.

புதிய பஜாஜ் வி12 மோட்டார்சைக்கிளில் ஒற்றை சிலிண்டர் கொண்ட ஏர் கூல்டு 124.45சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அதிகபட்சமாக 10.5 பிஎஸ் பவரையும், 10.8 என்எம் டார்க் திறனையும் இந்த மோட்டார்சைக்கிள் வழங்கும். இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

பெரும்பாலும் வி15 பைக்கின் டிசைனை ஒட்டியே இந்த வி12 பைக்கும் இருக்கிறது. இதில் கூடுதலாக கருப்பு வண்ண மட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 13 லிட்டர் அளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கின் மொத்த எடை 133 கிலோவாக உள்ளது.

முன்பக்க டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் வி12 பைக் ரூ.60,000 (டெல்லி, எக்ஸ்ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.

இந்த புதிய வி12 பைக்குக்காக புக்கிங்குகளை பஜாஜ் டீலர்கள் ஏற்கெனவே பெறத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் வி12 பைக்கானது 125சிசி கம்யூட்டர் செக்மெண்டில் ஹோண்டாவின் சிபி ஷைன் மற்றும் ஹீரோவின் கிளாமர் ஆகிய மாடல்களுடன் போட்டியில் உள்ளது.

English summary
Read in Tamil about Bajaj launches new variant of v12 bike with front disc barake. price, mileage, specs and more.
Please Wait while comments are loading...

Latest Photos