பஜாஜ் பல்சர் ஏஎஸ்150 மாடல் பைக் விற்பனை நிறுத்தம்

Written by: Super Admin

பிரபல இருசக்கர தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, தனது அட்வெஞ்சர் மாடல் பைக்கான ஏஎஸ் 150 மாடலின் விற்பனையை நிறுத்துகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.

கடந்த 2015ஆம் ஆண்டு தனது அட்வென்சர் ஸ்போர்ட் மாடல் என்ற அடைமொழியுடன் ஏஎஸ்150 மாடல் பைக்கினை அறிமுகப்படுத்தியது. இதனுடனேயே சேர்த்து ஏஎஸ் 200 மாடலும் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

பஜாஜ் நிறுவனம் ஆர் எஸ் 200 மற்றும் ஏஎஸ் 200 மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு 200 என்எஸ் மாடலின் விற்பனையை கடந்த 2015ல் நிறுத்தியது, எனினும் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இவ்விறு மாடல்களின் விற்பனை இல்லாத காரணத்தால், சமீபத்தில் மீண்டும் 200 என்எஸ் மாடலை மறுஅறிமுகம் செய்தது பஜாஜ்.

இந்நிலையில், சமீபத்தில் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், இந்தியாவில் புதிய கேடிஎம்390 மாடலை அறிமுகப்படுத்திய பின்னர், அட்வென்சர் ஸ்போர்ட் சீரீஸ் (ஏஎஸ்) பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது பல்சர் ஏஎஸ்150 மாடலின் விற்பனையை பஜாஜ் நிறுத்துவதாக தெரிகிறது. பல்சர் ஏஎஸ்150 பைக்கில் காற்றால் குளிர்விக்கப்படும் 149.5 சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 16.8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

இதன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறம் டிரம் பிரேக்கிங்கும் உள்ளது. இதன் விலை ரூ. 81,230 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) ஆகும். மேலும் பஜாஜின் அனைத்து பைக்குகளும் பிஎஸ்4 தர புகைச்சான்று பெற்றதாகும்.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் படங்கள்:

Story first published: Wednesday, February 15, 2017, 18:11 [IST]
English summary
The ‘AS’ stands for Adventure Sport and the series was launched in 2015.
Please Wait while comments are loading...

Latest Photos