சென்னையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவை கலக்கப் போகும் பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் சொகுசுக் கார்..!!

Written By:

இந்த மாத இறுதியில் அறிமுகமாக இருக்கும் புதிய 5 சீரீஸ் கார்களின் உற்பத்தி பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் சென்னை தொழிற்சாலையில் தொடங்கி இருக்கிறது.

சொகுசுக் கார் உலகில் கோலோச்சி வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது இந்திய தொழிற்சாலையை சென்னை அருகில் அமைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில் தற்போது உலகலவில் பிரபலமான செடன் வகை மாடலாக விளங்கும் 5 சீரீஸ் கார்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘பிஎம்டபிள்யூ இந்தியா' நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவாஹ் கூறுகையில், இந்த மாதத்தின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார்களின் உற்பத்தி சென்னை தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளது என்றார்.

பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் பல ஆண்டுகளாக அதன் செக்மெண்டில் உலகலவில் தலைசிறந்த மாடலாக இருந்து வருவதாகவும், இந்திய சொகுசுக் கார் சந்தையில் பட்டையை கிளப்பத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் நிறைந்துள்ளாதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலகப் புகழ்மிக்க பிம்டபிள்யூ 5 சீரீஸ் கார்களின் உற்பத்தி நேற்று (13.06.2017) முதல் துவங்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ சென்னை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் ஜோசென் ஸ்டால்காம்ப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

சென்னை தொழிற்சாலையில் தற்போது 7வது தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

5 சீரீஸ் கார்களின் டிசைன் 7 சீரீஸ் கார்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் அதிக வலிமைமிக்க ஸ்டீல் மற்றும் அலுமினியம் கொண்ட கட்டமைப்புடன் தயாரிக்கப்படுவதால் முந்தைய தலைமுறை கார்களை விட 100 கிலோ வரை எடை குறைவானதாக இவை இருக்கும்.

பிஎம்டபிள்யூவின்சென்னை தொழிற்சாலை தனது உற்பத்தியை கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 29ல் துவங்கியது. தற்போது 5 சீரீஸ் கார்கள் தயாரிக்கப்படுவது இந்த தொழிற்சாலையின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

தற்போது சென்னை தொழிற்சாலையில் 1 சீரீஸ், 3 சீரீஸ், 3 சீரீஸ் கிரான்ட் டூரிஸ்மோ, 7 சீரீஸ், எக்ஸ் 1, எக்ஸ் 3, எக்ஸ் 5 மற்றும் ‘மினி' ஆகிய மாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு 650 நேரடி ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். கூடுதலாக 3000 பணியிடங்கள் டீலர் மற்றும் சர்வீஸ் நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Read in Tamil about bmw chennai plant commences production of new 5 series car.
Please Wait while comments are loading...

Latest Photos