இந்தியாவில் ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம் ஏன்..?? மௌனத்தை கலைத்த பிஎம்டபுள்யூ..!!

Written By:

உலகளவில் பைக் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வெளியீடு மேலும் தாமதமாகும் என பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2017ம் ஆண்டின் இறுதியில் மோட்டார்ட் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கை வெளியிடும் என முன்னர் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது அந்நிறுவனத்தின் தலைமை   அதிகாரி ஒருவர், ஜி 310 ஆர் பைக்கின் இந்திய வெளியீடு மேலும் தாமதமாகும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் பி.எம்.டபுள்யூ அதிகாரப்பூர்வமாக கால் பதித்த போது, 313 சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த மாடலை வெளியிடும் எண்ணமே அதற்கு இல்லை.

அதற்கு பதிலாக ஆட்வெஞ்சர் மாடலான ஆர்1200 பைக்குகள், 6 சிலிண்டர் கொண்ட கே 1600 பைக்குகள் போன்றவற்றை தயாரிக்கும் எண்ணத்தில்  அந்நிறுவனம் இருந்தது.

கூடுதலாக மேம்படுத்தப்பட்ட எஸ்1000 பைக்கின் சூப்பர் பைக்கான எஸ் 1000எக்ஸ்.ஆர் சூப்பர் பைக் மற்றும் ஸ்போர்ட்ஸ் நேகிடு எஸ்1000 ஆர் பைக் ஆகியவற்றை இந்தியாவில் தயாரிக்கும் முடிவில் பிஎம்டபுள்யூ மோட்டராட் இருந்தது. 

இந்தியளவில் பிஎம்டபுள்யூ-விற்கு 4 கிளைகள் இருந்தாலும், பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கிற்கான சந்தையை அதிகரிக்கும் நோக்கில் மோட்டராட் சில திட்டங்களை செய்து வருகிறது.

பி.எம்.டபுள்யூ-விற்கான இந்திய அதிகாரியாக உள்ள விக்ரம் பவா, பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் சந்தைக்கான உள்கட்டமைப்பை மாற்றும் முடிவை உறுதி செய்துள்ளார்.

பிஎம்டபுள்யூ நிறுவனம் ஜி 310 ஆர் பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் சிலிண்டர் கொண்ட இதனுடைய எஞ்சின், லிக்குவிட் கூல் தொழில்நுட்பத்தை கொண்டது. மேலும் இதனுடைய எடையும் அனைவரும் கையாளும் விதத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜி 310 ஆர் பைக்கின் சிற்பம்சத்தை பார்த்தால், 33.5 பி.எச்.பி பவர் மற்றும் 28.4 டார்க் திறனை வழங்கும் என்று பிஎம்டபுள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது.

தயாரிப்பு நிலையை அடைந்துவிட்டாலும், ஜி 310 ஆர் பைக்கின் பல மாடல்கள் இந்தியாவை விட ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டின் சந்தைகளில் அதிகம் விற்பனை ஆகும் என்று தெரிகிறது.

அப்பாச்சி ஆர் ஆர் 310 எஸ் பைக்கின் விற்பனை இந்தியாவில் தற்போது நல்ல நிலையில் உள்ளது.     ஜி 310 ஆர் பைக் வெளிவந்தால் அதனுடைய விற்பனை பாதிக்கப்படலாம் என பி.எம்.டபுள்யூ எண்ணுகிறது. மேலும் அப்பாச்சி டிவிஎஸ் தயாரிப்பு என்பதால், பிஎம்டபுள்யூ இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆட்டோமொபைல் துறையில்   இருந்து நமக்கு தகவல் கிடைக்கிறது. 

அப்பாச்சி ஆர் ஆர் 310 எஸ் பைக் தற்போது தான் விற்பனைக்கு வந்துள்ளது. டிவிஎஸ் உடனான ஒப்பந்தத்தில் பிஎம்டபுள்யூ இருப்பதால் ஜி 310 ஆரின் விற்பனை அதை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என பி.எம்.டபுள்யூ எண்ணுகிறது.

இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

வாங்க முடியாவிட்டாலும், இதை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என பல ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் காத்துகிடக்கும் அளவிற்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜி 310 ஆர் பைக்கின்எக்ஸ். ஷோரூமின் விலை ரூ. 2.50 லட்சமாக இருக்கலாம் என தெரிகிறது.

English summary
BMW G 310 R seems to be delaying its launch in India more than what enthusiasts would have expected. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos