சைக்கிளிற்கான காற்றற்ற டயர்களை தயாரித்து பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் சாதனை

Written By:

செயல்திறன், எஞ்சின் திறன், வடிவம், ஆற்றல் என ஒரு வாகனத்திற்கான அனைத்து கட்டமைப்புகளிலும் மாற்றம் வந்துவிட்ட நிலையில். டயர்கள் செயல்படுவதிலும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் பிரபல டயர் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்ஜஸ்டோன், காற்றில்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் டயரை உருவாக்கியுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளை 2011ம் ஆண்டிலேயே தொடங்கிய பிரிட்ஜஸ்டோன் 6 வருடங்களுக்கு பிறகு காற்றற்ற டயர்களை உருவாக்கி அதில் வெற்றிக்கண்டுள்ளது.

பிரிட்ஜஸ்டோன் உருவாகியிருக்கும் இந்த புதிய மார்டன் டயரில், காற்றுக்கு பதிலாக நெகிழும் தன்மைகொண்ட உயர்ரக பிளாஸ்டிக் (தெர்மோபிளாஸ்டிக்) இருக்கும். ஃபோர்க்ஸ் போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த டயர் தான் வாகனத்தையும் ஓட்டுநரையும் தாங்கி நிற்கும்.

புதிய செயல்பாடுகள் கொண்ட இந்த டயரை பிரிட்ஜஸ்டோன் நிறுவனம் தனது மற்றொரு சைக்கிள்கள் தயாரிக்கும் பிரிட்ஜஸ்டோன் சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. முதற்கட்ட சோதனை முயற்சியாகவே இவை, தற்போதைக்கு சைக்கிளின் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தெர்மோபிளாஸ்டிக்கில் இயங்கும் இந்த டயர்களை, மறுசுழற்ச்சி முறையில் மீண்டும் உருவாக்க முடியும். மேலும் டயர்களோடு வெளிப்புறத்தில் சாலைகளுக்கு ஏற்றவாறு பயணிக்கவும் வகையில் அமைக்கப்பட்டுயிருக்கும் ரப்பர்களையும் மறுசுழற்சி முறையில் உருவாக்கலாம்.

தற்போது இருக்கும் டயர்களை போல இதை நாம் நீடித்துக்கொள்ள முடியாது. ஆனால் சைக்கிள்களின் அளவுகளுக்கு ஏற்றவாறு நாம் இதை மாற்றியமைத்துக்கொள்ளலாம். மேலும் ஒரேமாறியான திறனில் தான் இந்த டயர்களை பயன்படுத்த முடியும்.

சாலைகளுக்கு ஏற்றவாறு எந்தவிதமான மாற்று வசதியையும் நாம் இந்த டயரின் பிடிமானத்தை நாம் மாற்றமுடியாது.

பிரிட்ஜஸ்டோன் நிறுவனம் தற்போது இந்த டயருக்கான சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் இது பயன்பாட்டிற்கு வர நிச்சயம் 2 ஆண்டுகள் ஆகும் அதாவது 2019ம் ஆண்டு வரை ஆகலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறும் சாலை பயணங்களுக்கு மட்டுமில்லாமல் சைக்கிள் சாகசத்திற்காகவும் நல்ல திறன் படைத்த டயர்கள் தேவைப்படுகின்றன . 2019ம் ஆண்டு காற்றற்ற இந்த டயர்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்னர் உறுதியான சாகச பயணங்களுக்கான டயராகவும் இது வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Bridgestone a Japan company introduces airless bicycle tire. It s designed with no flats and no pumping. Click for more...
Please Wait while comments are loading...

Latest Photos