மேம்படுத்தப்பட்ட புதிய 2017 யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஃபேஸினோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது யமஹா நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் புதிய விதிமுறையான, பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு சான்று பெற்ற இஞ்சினுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 2017 ஃபேஸினோ ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்4 மாசு உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதால், ஃபேஸினோ ஸ்கூட்டரை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது யமஹா நிறுவனம். அதன் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களும் பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக யமஹா அறிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

புதிய கிராஃபிக்ஸில் கவர்ந்திழுக்கும் டிசைன் கொண்ட ஃபேஸினோ ஸ்கூட்டர் தற்போது மேலும் கவர்ச்சிகரமான டூயல் டோன் வண்ணக்கலவையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு புதிய ஸ்டைலிங்கில் வெளிவந்துள்ளது. இதில் ஆட்டோமேடிக் ஹெட்லைட் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

புதிய கிராஃபிக்ஸ், பிஎஸ்-4 தர இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட், ஸ்டைலிஷ் மீட்டர் கன்சோல், க்ரோம் பினிஷ் செய்யப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் கவர்ச்சிகரமான டூயல் டோன் வண்ண பெயிண்டிங் ஆகிய மாற்றங்களை கண்டுள்ளது புதிய 2017 ஃபேஸினோ.

மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

யமஹா 2017 ஃபேஸினோவில் காற்றால் குளிர்விக்கப்படும் ஒற்றை சிலிண்டர் கொண்ட 113சிசி எஸ்ஓஹச்சி புளூ கோர் இஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-மில் 7.1 பிஎஸ் ஆற்றலையும், 5,000 ஆர்பிஎம்-மில் 8.1 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

டூயல் டோன் கலர்கள்:

டூயல் டோன் கலர்கள்:

2017 ஃபேஸினோ 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் 4 டூயல் டோன் வண்ணங்கள் மற்றும் இரண்டு சிங்கில் டோன் வண்ணங்களாகும்.

  • பிளெண்டிங் பிளூ (Blending blue)
  • ஃபியூஷன் ரெட் ( Fusion Red)
  • யுனைட் ஒயிட் (Unite White)
  • மிங்ளிங் சியான் (Mingling Cyan)
  • சிங்கில் டோன் கலர்கள்:

    சிங்கில் டோன் கலர்கள்:

    • ஹவுட் ஒயிட் (Haute White)
    • சேசி சியான் (Sassy Cyan)
    • ஏற்கெனவே கிடைத்து வந்த டக்ஸடோ பிளாக், கூல் கோபால்ட் மற்றும் ரஃப் ரெட் ஆகிய வண்ணங்கள் கைவிடப்பட்டுள்ளதாக யமஹா அறிவித்துள்ளது.

      மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

      புதிய ஃபேஸினோ 1815 மிமீ நீளமும், 675 மிமீ அகலமும், 1120 மிமீ உயரமும் கொண்டதாகும். மேலும் இதன் வீல் பேஸ் 2 மிமீ அதிகரிக்கப்பட்டு 130 மிமீ ஆக உள்ளது. இதன் சீட் உயரம் 775 மிமீ ஆக இருப்பதால் எளிதாக ஸ்கூட்டரை ஹேண்டில் செய்யலாம்.

      மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

      ஃபேஸினோவின் பெட்ரோல் டேங்க் 5.2 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். ஃபேஸினோ ஸ்கூட்டர் லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என யமஹா நிறுவனம் கூறுகிறது. இதன் எடை 103 கிலோவாகும்.

      மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

      நடப்பு மாடலைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஃபேஸினோவின் விலை 1,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரூ.54,330 ( எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது.

      மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் அறிமுகம்

      முன்பக்க மற்றும் பின்பக்க பிரேக்குகள் இரண்டும் இணைந்து செயல்படும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் ஃபேஸினோவில் தரப்படாதது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.

      ஹோண்டா ஆக்டிவா 4ஜி மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ஃபேஸினோ இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2017 Yamaha Fascino has been launched in India
Story first published: Wednesday, April 5, 2017, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X