ரூ.1.3 லட்சத்துக்கு பிஎஸ்-3 கேடிஎம் ட்யூக் 390 பைக் விற்பனை?!

பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட கேடிஎம் ட்யூக் 390 பைக்கை டீலர் ஒருவர் மலிவு விலையில் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

Written By:

ரூ.1.3 லட்சம் விலையில் பிஎஸ்-3 கேடிஎம் ட்யூக் 390 பைக்குகளை டீலர் ஒருவர் விற்பனை செய்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த புதிய மாடலில் ஏராளமான சிறப்பம்சங்கள் இருந்ததால், பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட பழைய மாடலை வாங்குவதை பல வாடிக்கையாளர்கள் தவிர்க்க துவங்கினர்.

இதனால், சில கேடிஎம் டீலர்களில் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட கேடிஎம் ட்யூக் 390 பைக்குகள் இருப்பில் தங்கிவிட்டன. இந்த நிலையில், பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்பட்டதால், இருப்பில் தங்கி இருந்த கேடிஎம் ட்யூக் 390 பைக்குகளை அதிரடி தள்ளுபடியுடன் பல டீலர்கள் விற்பனை செய்தனர்.

ஆனால், இந்த பைக்குகளை பதிவு செய்ய முடியுமா என்ற குழப்பத்தில் பல வாடிக்கையாளர்கள் தவிர்த்தனர். இந்த நிலையில், பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட கேடிஎம் ட்யூக் 390 பைக்குகளை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கேடிஎம் டீலர் அதிரடி தள்ளுபடியுடன் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் பாய்சர் என்ற இடத்தில் உள்ள கேடிஎம் டீலரில் இருப்பில் தங்கி இருந்த பிஎஸ்-3 கேடிஎம் ட்யூக் 390 பைக்குகள் ரூ.1.3 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

அதாவது, பிஎஸ்-3 ட்யூக் 390 பைக்குகளை அந்த டீலர் தனது பெயரில் பதிவு செய்துவிட்டார். தற்போது அதனை பயன்படுத்தப்பட்ட பைக் போல விற்பனை செய்து வருகிறாராம். IceAgeOnWheels என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்று விற்பனை செய்த தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

பைக் வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், தற்போது வாங்கும் வாடிக்கையாளர் இரண்டாவது உரிமையாளராக கருத முடியும். அதேநேரத்தில், இந்த பைக்குகள் ஒரு கிலோமீட்டர் தூரம் கூட ஓடாத புத்தம் புதிய பைக்குகள்தான்.

எனவே, விபரம் அறிந்த பல வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு இந்த கேடிஎம் ட்யூக் 390 பைக்குகளை வாங்கி இருக்கின்றனர். மேலும், இந்த பிஎஸ்-3 கேடிஎம் ட்யூக் 390 பைக்குகளை வாங்கியோருக்கு ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Source

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #கேடிஎம் #ktm
Story first published: Thursday, May 18, 2017, 12:07 [IST]
English summary
BS3 KTM Duke 390 is being sold for Rs 1.5 lakh on-road by KTM Boisar. Here’s more details on how this is possible.
Please Wait while comments are loading...

Latest Photos