ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை உருமாற்றிய பெங்களூர் நிறுவனம்!

Written By:

மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்ய விரும்புவோருக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கின்றன. நம் நாட்டில் செயல்பட்டு வரும் பல கஸ்டமைஸ் நிறுவனங்கள் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் அடிப்படையில்தான் கஸ்டமைஸ் பணிகளை செய்து தங்களது நிபுணத்துவத்தை காட்டி வருகின்றன.

அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை மிக நேர்த்தியான ஸ்ட்ரீட் ராடு வகை கஸ்டமைஸ் மாடலாக மாற்றி இருக்கிறது பெங்களூரை சேர்ந்த புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனம். ராப்டர் 540 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மோட்டார்சைக்கிள் முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுக்கிறது.

கருப்பு- சிவப்பு வண்ணக் கலவையுடன் காட்சி தரும் ராப்டர் 540 மோட்டார்சைக்கிளின் ஒவ்வொரு அங்கமும் கண்களுக்கு விருந்து படைக்கிறது. படத்தில் பார்ப்பது இந்த ஸ்டைலில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட 27வது மோட்டார்சைக்கிள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வித்தியாசமான ஹெட்லைட் அமைப்பு, சிவப்பு வண்ணத்தில் மிரட்டலான பெட்ரோல் டேங்க் பேனல்கள், ஒற்றை இருக்கையுடன் காட்சி தருகிறது. இதன் ஃப்ரேம் பாதியளவு கத்தரிக்கப்பட்டு ஸ்ட்ரீட் ராடு ரக மோட்டார்சைக்கிளாக மாற்றப்பட்டு இருக்கிறது.

புதிய சைடு ரியர் வியூ மிரர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இருக்கிறது. எஞ்சின், சக்கரங்கள், சைலென்சர் ஆகியவை கருப்பு வண்ணத்திலும், சில இடங்களில் க்ரோம் அலங்கார பாகங்களும் மிகச் சிறப்பான கவர்ச்சியை தருகிறது.

முன்புறத்தில் 120 செக்ஷன் பெரெல்லி டயரும், பின்புறத்தில் 240 செக்ஷன் பைரெல்லி நைட் டிராகன் டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புற டயர் மிக பிரம்மாண்டமான தோற்றத்தை தருவதோடு, அதிக தரைப்பிடிப்பையும் வழங்கும்.

இந்த மோட்டார்சைக்கிளின் ஃப்ரேம் கத்தரிக்கப்பட்டு விட்டதால், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ராப்டர் 540 மோட்டார்சைக்கிள் வரிசைக்காக பிரத்யேக ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஒட்டுமொத்த கஸ்டமைஸ் வேலைப்பாடும் மிக மிக கவர்ச்சியாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் தொடர்பாக கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிமுதல் இரவு 7 மணிவரை 99728 62139 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Story first published: Tuesday, March 21, 2017, 14:18 [IST]
English summary
Customised Royal Enfield Classic 500 by Bulleteer Customs. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos