ஜிஎஸ்டி வரியின் அடிப்படையில் டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

ஜிஎஸ்டி வரியின் அடிப்படையில் டுகாட்டி பைக் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஜிஎஸ்டி வரியின் அடிப்படையில் தனது பைக்குகளின் விலையில் மாற்றங்களை செய்து விபரங்களை வெளியிட்டு இருக்கிறது டுகாட்டி நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

ஜிஎஸ்டி வரியின் அடிப்படையில் டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி எக்ஸ்டயாவெல் பைக்கின் விலை குறைந்துள்ளது. பிற மாடல்களின் விலை அதிகரித்துள்ளது. டுகாட்டி எக்ஸ்டயாவெல் எஸ் மாடல் அதிகபட்சமாக ரூ.18,000 குறைந்துள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 1200எஸ் பைக்கின் விலை ஜிஎஸ்டி வரியின் காரணமாக ரூ.78,000 உயர்ந்துள்ளது. மான்ஸ்டர் 1200 பைக்கின் விலை ரூ.68,000 அதிகரித்துள்ளது.

 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

டுகாட்டி நிறுவனத்தின் குறைவான விலை மாடல்களான ஸ்க்ராம்ப்ளர் ஐகான் பைக்கின் விலை ரூ.26,000 வரை அதிகரித்துள்ளது. ஸ்க்ராம்ப்ளர் ஐகான் ரெட் பைக்கின் விலை ரூ.7.23 லட்சம் விலையிலும், ஸ்க்ராம்ப்ளர் ஐகான் யெல்லோ பைக் ரூ.7.33 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் இனி கிடைக்கும்.

 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

ஜிஎஸ்டி வரிக்கு முன்னர் மற்றும் ஜிஎஸ்டி வரிக்கு பின்னர் டுகாட்டி பைக்குகளின் விலையும், அதன் தற்போதைய விலை வித்தியாசத்தையும் கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

மாடல் ஜிஎஸ்டிக்கு முன் ஜிஎஸ்டிக்கு பின் விலையில் மாற்றம்
மான்ஸ்டர் 797 ரூ.7.77 லட்சம் ரூ.8.05 லட்சம் ரூ.28,000
ஸ்க்ராம்ப்ளர் ஐகான் ரெட் ரூ.6.97 லட்சம் ரூ.7.23 லட்சம் ரூ.26,000
ஸ்க்ராம்ப்ளர் ஐகான் யெல்லோ ரூ.7.07 லட்சம் ரூ.7.33 லட்சம் ரூ.26,000
ஸ்க்ராம்ப்ளர் க்ளாசிக் ரூ.8.18 லட்சம் ரூ.8.48 லட்சம் ரூ.30,000
 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

ஜிஎஸ்டி வரிக்கு முன்னர் மற்றும் ஜிஎஸ்டி வரிக்கு பின்னர் டுகாட்டி பைக்குகளின் விலையும், அதன் தற்போதைய விலை வித்தியாசத்தையும் கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

மாடல் ஜிஎஸ்டிக்கு முன் ஜிஎஸ்டிக்கு பின் விலையில் மாற்றம்
மான்ஸ்டர் 1200எஸ் ரூ.27.34 லட்சம் ரூ.28.12 லட்சம் ரூ.78,000
மான்ஸ்டர் 1200 ரூ.22.34 லட்சம் ரூ.23.02 லட்சம் ரூ.68,000
மல்டிஸ்ட்ரேடா 950 ரூ.12.60 லட்சம் ரூ.12.82 லட்சம் ரூ.22,000
மல்டிஸ்ட்ரேடா 1200 ரூ.14.85 லட்சம் ரூ.15.38 லட்சம் ரூ.53,000
மல்டிஸ்ட்ரேடா 1200 எஸ் ரூ.16.91 லட்சம் ரூ.17.51 லட்சம் ரூ.60,000
மல்டிஸ்ட்ரேடா என்டியூரோ ரூ.17.44 லட்சம் ரூ.18.05 லட்சம் ரூ.61,000
 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக்கின் விலை ரூ.28,000 அதிகரித்துள்ளது. இதன்படி, ரூ.8.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இனி கிடைக்கும். டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 பைக் ரூ.12.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

டுகாட்டி மல்டி ஸ்ட்ரேடா 1200 மற்றும் 1200எஸ் மற்றும் என்டியூரோ மாடல்கள் ரூ.61,000 வரை விலை உயர்ந்துள்ளது. இவை முறையே ரூ.15.38 லட்சம், ரூ.17.51 லட்சம் மற்றும் ரூ.18.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைகளில் கிடைக்கும்.

 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

டுகாட்டி 1299 பனிகாலே ஆர் ஃபைனல் எடிசன் மாடல் ஜிஎஸ்டிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்டதால், விலையில் மாற்றம் இல்லை. இந்த பைக் ரூ.59.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 டுகாட்டி பைக்குகளின் புதிய விலை விபரம் வெளியானது!

மேலும், டுகாட்டி டயாவெல் மற்றும் மான்ஸ்டர் 821 பைக்குகளின் பிஎஸ்-4 மாடல்கள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Carandbike

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
The implementation of the Goods and Service Tax (GST) has led to the revision of the prices of automobiles in the country. Now, Ducati India has announced the post-GST prices for its motorcycles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X