ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் தயாரிக்கும் எலெக்ட்ரிக் பைக்

Written By:

அமெரிக்காவைச் சேர்ந்த 'எவோக் மோட்டார்சைக்கிள்ஸ்' வளர்ந்து வரும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வழங்குவதற்காக பாக்ஸ்கான் நிறுவனத்திடம் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது எவோக்.

தைவானைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனமானது 13 லட்சம் ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வருவாய் அடிப்படையில் உலகின் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகவும் லாபகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் கூட இந்நிறுவனத்திற்கு ஒரு உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது.

உலகின் பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை தயாரித்து வழங்கும் முன்னோடி நிறுவனமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளங்கி வருகிறது. ஆப்பிள் ஐ-போன், ஐ-பாட், நோக்கியா, பிளாக்பெரி, பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ், கிண்டில் போன்ற பல நிறுவன பொருட்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த எவோக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்களை தயாரிப்பதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் அந்நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

இது தொடர்பாக் எவோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாதன் சிய் கூறுகையில், "ரைடர்கள் மற்றும் மற்றவர்களும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவதற்கான வாய்ப்பை எவோக் வழங்குகிறது, இப்புதிய ஒப்பந்தம் மூலமாக எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு உள்ள விலை உட்பட பல தடைகளை உடைத்தெறியப்படும்" என்றார்.

எவோக் நிறுவனம் ‘அர்பன் எஸ் ஸ்மார்ட்' பைக்குகளை தயாரித்து அமெரிக்கா மற்றும் சீன நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான ஆர்டர்களை தற்போது பெறத்துவங்கியுள்ளது அந்நிறுவனம்.

கடந்த ஆண்டில் 120 வாகனங்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ள நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்தின் வாயிலாக 2,000 வாகனங்களை தயாரிக்க அந்நிறுவனம் இலக்கு நிர்னயித்துள்ளது.

புதிய மேம்படுத்தப்பட்ட 2017‘அர்பன் எஸ்'பைக்கை எவோக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பேட்டரி பவர்பேக் திறன் 9 கிலோவாட்டாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சார்ஜுக்கு நகர்பகுதிகளில் 200 கிமீ-ம், நெடுஞ்சாலையில் 120 கிமீ தூரமும் பயணிக்கலாம்.

இதில் 19 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது அதிகபட்சமாக 116 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும், மேலும் 130 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். எவோக் நிறுவனம் மேலும் இரண்டு புதிய மோட்டார் சைக்கிள் மாடல்களை இந்த ஆண்டில் இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியன் ஸ்கவுட் எஃப்டிஆர் 750 பைக்கின் படங்கள்: 

English summary
We want riders and non-riders to get a chance to access the world of electric motorcycles, and we have tried to strip back all the usual barriers including price.”
Please Wait while comments are loading...

Latest Photos