ஜிஎஸ்டி எதிரொலி: ஹீரோ நிறுவன பைக்குகள் ரூ.400 முதல் ரூ.1,800 வரை அதிரடியாக விலை குறைந்தது..!!

Written By:

அறிவித்தபடியே இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி மதிப்பு அமலாகி விட்டது. இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், வாகன துறையில் ஜிஎஸ்டி-யை வைத்து அதிரடி தள்ளுபடி அறிவிப்புகள் பல தொடர்ந்து வெளியாகிக்கொண்டே உள்ளது.

இருசக்கர வாகன உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப், அதிக விற்பனை பெற்ற தனது பைக் மாடல்களின் விலையை ரூ.1,800 வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை ஈடுசெய்யவே தனது தயாரிப்புகளுக்கு ரூ.400 தொடங்கி ரூ.1,800 வரை விலை குறைப்பு செய்துள்ளதாக ஹீரோ காரணம் தெரிவிக்கிறது.

ஜி.எஸ்.டி-க்கு பின், ஜி.எஸ்.டி-க்கு பின் என்ற ரீதியில் மாநிலவாரியாக ஹீரோவின் பைக்குகளுக்கான விலையில் மாற்றம் உள்ளது.

எனினும் ஹீரோவின் ப்ரீமியம் மாடல்கள் சில மாநிலங்களின் சந்தை நிலவரத்தை பொறுத்து ரூ.4,000 வரை தள்ளுபடி பெற்றுள்ளன.

இந்த தள்ளுப்படிக்கான முழு அறிக்கையையும் ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஜி.எஸ்.டி-க்கு முன், ஜி.எஸ்.டி-க்கு பின் என்ற ரீதியில் ஹரியான மாநிலத்தின் இந்த விலை குறைப்பு சாத்தியமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி-யால் ஆடம்பர மற்றும் பெரியளவிலான கார்களுக்கான வரி குறைந்ததை அடுத்து, பி.எம்.டபுள்யூ, மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் ஜாகுவார் போன்ற நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை கடந்த சனிக்கிழமை அன்று ரூ,2,300 தொடங்கி ரூ.2 லட்சம் வரை குறைத்துள்ளதாக அறிவித்தன.

அதற்கு பிறகு இது தொடர்பான நடவடிக்கையை ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஹீரோ தயாரிப்புகளுக்கு அதரவு அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பால் ஹீரோவின் தயாரிப்புகள் மேலும் இந்தியாவில் அதிக விற்பனை திறனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ உட்பட பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஜிஎஸ்டி-யால் வாகனங்களின் மீது அதிரடி விலை குறைப்பை அறிவித்திருந்தாலும், இந்திய சந்தையை பொறுத்தவரை ஜிஎஸ்டி-யை சரியாக கையாண்ட நிறுவனமாக மாருதி சுசுகி இந்தியா உள்ளது.

அந்நிறுவனம் தயாரித்து சந்தையில் விற்பனையில் உள்ள பயணிகள் ரக மாடல் கார்களுக்கு 3 சதவீதம் வரை விலை குறைப்பை மாருதி சுசுகி அறிவித்துள்ளது.

ஆனால் செடான் மாடலான டீசல் சியாஸ் மற்றும் சிறியளவிலான ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தை பெற்ற எம்.வி.பி ரக எர்டிகா போன்ற கார்கள் ரூ.1 லட்சம் வரை விலை உயர்வை எட்டியுள்ளன.

ஜிஎஸ்டி அமலாக்கம் பல்வேறு வாகன பயனாளிகள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு திருப்தி அளித்திருந்தாலும், வாகன உலகின் எதிர்காலமாக கருதப்படும் ஹைஃபிரிட் தொழில்நுட்பம் பெற்ற கார்களின் விலை அதிகரித்துள்ளது சில விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

மேலும்... #ஹீரோ #hero
English summary
Hero Motocorp Cuts Prices from Rs.400 to Rs.1800 across models. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos