புதிய ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

பேட்டரியில் இயங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதனை கருதி பல புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இந்த துறையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. பல புதிய மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும் இந்த நிறுவனம் தற்போது ஃப்ளாஷ் என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய ஹீரோ ப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் 48V/20AH VRLA பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.இந்த ஸ்கூட்டரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும்.

புதிய ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால்,65 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் என்பதால், நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிக ஏற்றதாக இருக்கும்.

புதிய ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

இந்த ஸ்கூட்டரில் 16 அங்குல கலப்பு உலோக சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் எடை 87 கிலோவாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே பொருட்களை வைப்பதற்கான இடவசதியும் உள்ளது.

புதிய ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

விபத்தில் சிக்கினால் ஓட்டுபவர் மற்றும் பின்னால் பயணிப்பவருக்கு மின்சார கசிவு காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பேட்டரியில் இருந்து மின் துண்டிப்பு செய்யும் விசேஷ நுட்பம் இருக்கிறது.

புதிய ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

இந்த ஸ்கூட்டர் கண்களை கவரும் வகையில், பர்கன்டி மற்றும் சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.19,990 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டருக்கு இரண்டு ஆண்டுகளுக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் எஸ்யூவியின் படங்கள்!

இந்தியா வரும் புதிய டொயோட்டா சிஎச்ஆர் எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Hero claims that the Flash will offer a riding range of 65kms on a single charge which takes about 6-8 hours.
Story first published: Friday, February 3, 2017, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X