மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹீரோ கிளாமர்125 பைக் ரூ.57,755 விலையில் அறிமுகம்..!

Written By:

நாட்டின் முன்னணி இருசக்கர நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ, தனது கிளாமர்125 பைக்கை பிஎஸ் தரத்திலான இஞ்சினுடன் புதிய தோற்றத்தில், பல்வேறு இயந்திரவியல் மாற்றங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய 2017 ஹீரோ கிளாமர் பைக் புதிய பாடி கிராஃபிக்ஸ், பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தர சான்று பெற்ற இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட், டிரிப் கேஜ், ஓடோமீட்டர், எல்ஈடி டெயில் லைட் மற்றும் புதிய ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

ஹீரோ நிறுவனத்தின் பிரத்யேக ஐ3எஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் டெக்னாலஜி இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. சிக்னல் போன்ற இடங்களில் காத்திருக்கும் போது பைக்கின் இஞ்சின் தானாக ஆஃப் ஆகிவிடும். பின்னர் கிளட்சை பிடித்தால் இஞ்சின் ஆன் ஆகிவிடும்.

சிறப்பம்சங்கள்

சிறந்த எரிபொருள் சிக்கனத்தை இந்த ஐ3எஸ் தொழில்நுட்பம் வழங்குகிறது. இதற்கான விஷேச ஸ்விட்சை பயன்படுத்தி இத்தொழிலில்நுட்பத்தை பயன்படுத்தலாம். தேவைப்படாத நிலையில் ஆஃப் செய்தும் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

புதிய கிளாமர்125 பைக் சமீபத்திய வரவான ஃபியூயல் இன்செக்‌ஷன் தொழில்நுட்பம் கொண்டு வெளியாகியுள்ளது.சிறந்த எரிபொருள் சிக்கனத்தை இது அளிக்கிறது. பொதுவான கார்பரேட்டர் வெர்ஷனிலும் இந்த பைக் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

இஞ்சின் திறன்

மேம்படுத்தப்பட்ட ஹீரோ கிளாமர் பைக்கின் இஞ்சினின் சக்தி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பிஎஸ்-4 125சிசி இஞ்சின், அதிகபட்சமாக 11.4 பிஎஸ் ஆற்றலையும், 11 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

இஞ்சின் திறன்

முந்தைய கிளாமர் பைக்கின் இஞ்சின் அதிகபட்சமாக 9.13 பிஎஸ் ஆற்றலையும், 10.35 என்எம் டார்க்கையுமே வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், புதிய கிளாமர் பைக்கின் எடையில் 3 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் டயர்களின் அகலமும் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்

முந்தைய மாடலைக் காட்டிலும் புதிய கிளாமரின் விலையில் 10,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய 2017 கிளாமர் ரூ.57,755 ( எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்ற விலையில் இருந்து தொடங்குகிறது.

விலை விபரம்

வேரியண்ட் வாரியான இதன் விலையை கீழே உள்ள பட்டியலில் காணுங்கள்..

  • டிரம் பிரேக் - ரூ.57,755
  • டிஸ்க் பிரேக் - ரூ.59,755
  • ஃபியூயல் இன்செக்‌ஷன்/ டிஸ்க் பிரேக் - ரூ.66,580

(விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் தரப்பட்டுள்ளது)

மைலேஜ்

கிளாமர் பைக்கின் கார்பரேட்டர் வேரியண்ட் லிட்டருக்கு 60 கிமீரும், ஃபியூயல் இன்செக்‌ஷன் சிஸ்டம் கொண்ட வேரியண்ட் லிட்டருக்கு 32 கிமீரும் மைலேஜ் தருவதாக ஹீரோ நிறுவனம் கூறுகிறது.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் முதல் பைக்காக வெளிவந்துள்ள கிளாமர், அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக் வரிசையில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

புக்கிங் கட்டணம்

2017 கிளாமர் பைக்குகளுக்கான புக்கிங்குகளை ஹீரோ டீலர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தெரிகிறது. குறைந்தபட்ச புக்கிங் கட்டணம் 1,000 ரூபாய் ஆகும். 15-20 நாட்களுக்குள் புதிய கிளாமர் பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, April 15, 2017, 13:07 [IST]
English summary
Read in Tamil about Hero Glamour125cc bike launch in india. price, mileage, specs and more
Please Wait while comments are loading...

Latest Photos