ஹீரோ இணையதளத்தில் இருந்து ஹங்க் மற்றும் எக்ஸ்ட்ரீம் பைக்குகள் திடீர் நீக்கம்; காரணம் இதுதான்..!!

ஹீரோ மோட்டார்கார்ப் இணையதளத்தில் இருந்து ஹங்க் மற்றும் எக்ஸ்ட்ரீம் பைக்குகள் திடீர் நீக்கம்.

By Azhagar

ஹீரோ நிறுவனத்தின் ஹங்க் மற்றும் எக்ஸ்ட்ரீம் மோட்டார் சைக்கிள்களை பற்றிய தகவல்களை ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளபக்கத்தில் இருந்து நீக்கியுள்ள்ளது.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஹங்க் மற்றும் எக்ஸ்ட்ரீம் பைக்குகளில் மேம்படுத்தப்பட்ட அமசங்களை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் வெளியிடுகிறது.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

இந்த காரணத்திற்காகவே இந்த இரு மோட்டார் சைக்கிள்களை குறித்த தகவல்களை ஹீரோ தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

மேம்படுத்தப்பட்ட ஹங்க் மற்றும் எக்ஸ்ட்ரீம் பைக்குகள் ஹெச்.எஃப் டான், ஸ்பிளெண்டர் ப்ரோ கிளாசிக் மற்றும் ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் ஆகிய வாகனங்களுடன் வெளிவருகின்றன.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

ஹீரோ நிறுவனம் ஹங்க் மற்றும் எக்ஸ்ட்ரீம் பைக்குகளுக்கான தகவல்களை முழுவதுமாக நீக்கிவிடவில்லை.

இந்த இரு மாடல்களையும் 150சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கான பகுதியில் ஹீரோ மாற்றி வைத்துள்ளது.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

இதே பிரிவில் ஹீரோ நிறுவனம் அச்சீவர் மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் மாடல் பைக்குகளை கூடுதலாக இணைத்துள்ளது.

ஐ3 தொழில்நுட்பத்தில் ஹீரோ தயாரித்துள்ள முதல் 1500சிசி திறன் கொண்ட பைக் என்ற பெருமையை ஹீரோ ஆச்சீவர் பெற்றுள்ளது.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

ஐ3 தொழில்நுட்பம் எஞ்சினை பாதுகாக்கவே வடிவமைக்கப்பட்டது. நீங்கள் வண்டியை இயக்கத்தில் இருக்கும் போது நிறுத்தியிருந்தால், அது ஐந்து நிமிடத்திற்குள் தானாகவே நின்றுவிடும்.

மேலும், வண்டியை சாவிப்போட்டு திறந்து, கிளட்ச்சை அழுத்திய அடுத்த நிமிடத்தில் உடனே இயங்கும் இது தான் ஐ3 தொழில்நுட்பம். இது முழுக்க முழுக்க எஞ்சின் பாதுகாப்பிற்கான தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம்.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

ஹீரோ அச்சீவர் பைக்கின் 149.1சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்சின் உள்ளது. இது 13.4 பி.எச்.பி பவர் மற்றும் 12.8 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக், இந்திய சந்தைக்காகவே தயாரான பைக். இதிலும் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 149.1சிசி திறன் கொண்ட எஞ்சின் உள்ளது.

இது 15.6 பி.எச்.பி பவர் மற்றும் 13.5 என்.எம் டார்க் திறனை வழங்கும். அச்சீவர் பைக்கை விட இதற்கு கொஞ்சம் ஆற்றல் அதிகம்.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

2017 முதல் 2018ம் நிதியாண்டில் ஹீரோ மோட்டார் கார்ப் அடுத்தடுத்து 6 புதிய இருசக்கர வாகனங்களை வெளியிடவுள்ளது.

இதற்காக அந்நிறுவனம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிதியாண்டில் சுமார் ரூ.2500 கோடி வரை முதலீடு செய்கிறது.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

இந்த முதலீட்டை வைத்து புதிய தயாரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் போக்குவரத்தை அதிவேகமாக இயங்கும் வகையிலான துரித தயாரிப்பு வடிவமைப்புகள் ஆகியவற்றை ஹீரோ உருவாக்குகிறது.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

ஹீரோ அடுத்து வெளியிடவுள்ள புதிய மோட்டார் சைக்கிள்களில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் அந்நிறுவனத்தின் ப்ரீமியம் தயாரிப்பாக இருக்கும்.

ஹீரோ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட 2 பைக்குகள்: விவரம்

இதுபோக மேலும் 125சிசி மற்றும் 15சிசி திறன் கொண்ட இரு மாடல் ஸ்கூட்டர்களையும் ஹீரோ 2017-18ம் நிதியாண்டில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹீரோ
English summary
Hero MotoCorp, India's largest two-wheeler manufacturer, has removed Hunk and Xtreme motorcycles from its Indian website.
Story first published: Tuesday, May 30, 2017, 18:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X