ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக் விற்பனைக்கு வந்தது- சிறப்பம்சங்கள், விலை விபரம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் கூடிய எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பது மிக முக்கியமானது. இந்த எஞ்சினில் கார்புரேட்டர் கொண்ட ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 8.24 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக்கில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் எஞ்சின் நியூட்ரல் கியரில் ஐட்லிங்கில் வைக்கப்பட்டால், தானாக ஆஃப் ஆகிவிடும். க்ளட்ச்சை பிடித்தால் மீண்டும் எஞ்சின் உயிர் பெற்றுவிடும். இதன்மூலமாக, எரிபொருள் விரயம் தவிர்க்கப்படுவதுடன், புகை வெளியேறுவது குறைக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு விளையும் தீங்கும் குறையும்.

டிசைனில் மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய ஸ்டிக்கர் மூலமாக புதுப்பொலிவு பெற்றுள்ளது. புதிய ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக்கில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த வசதி அனைத்து பைக்குகளிலும் கட்டாயமாக்கப்படுவதால், முன்கூட்டியே இந்த வசதியை சேர்த்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

புதிய ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக் மேட் பிரவுன், மிஸ்டிக் ஒிட், பிரான்ஸ் யெல்லோ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் ஃபோர்ஸ் சில்வர் என்ற 5 விதமான ஒற்றை வண்ணங்களிலும், கறுப்பு வண்ணக் கலவையுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் ரெட், ஃப்ராஸ்ட் புளூ மற்றும் ஹெவி க்ரே என்ற மூன்றுவிதமான இரட்டை வண்ணங்களிலும் கிடைக்கும்.

புதிய ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக்கானது மூன்றுவிதமான மாடல்களில் வந்துள்ளது. ஸ்போக்ஸ் வீல் மற்றும் டிரம் பிரேக் கொண்ட மாடல், அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக்குகள், அலாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

விலை விபரம்

அதிக சிறப்பம்சங்கள், மிக சரியான பட்ஜெட்டில் வந்துள்ளது புதிய ஹீரோ பேஷன் புரோ ஐ3எஸ் பைக். இந்த புதிய பைக்கின் மூன்று மாடல்களின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரத்தை கீழே உள்ள விலைப் பட்டியலில் காணலாம்.  

மாடல் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி]
ஸ்போக்ஸ் வீல்களுடன் டிரம் பிரேக் மாடல் ரூ.50,955
அலாய் வீல்களுடன் டிரம் பிரேக் மாடல் ரூ.51,905
அலாய் வீல்களுடன் டிஸ்க் பிரேக் மாடல் ரூ.53,805

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவியின் படங்கள்!

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது என்ற தகவலை கேட்டவுடன், அதனை முழுமையாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறதல்லவா? அதனை தீர்ப்பதற்காக 35 படங்கள் அடங்கிய கேலரியை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Hero Passion Pro i3S has been launched in India and gets a BS-IV compatible engine with the i3S system along with Auto Headlight On (AHO).
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK