உலகில் அதிகம் விற்பனையாகும் பைக் என்ற சாதனையை படைத்த ஸ்பிளெண்டர் பைக்!

உலகில் அதிகமாக விற்பனையாகும் இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் முதலிடம் பிடித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டரைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிதியாண்டின் 3வது கால்பகுதியில் உலகில் அதிகம் விற்பனையான பைக் என்ற பெருமையை பெற்றுள்ளது ஹீரோ ஸ்பிளெண்டர். நிதி ஆண்டின் முதல் பாதியில் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் முதலிடம் வகித்து வந்தது.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் 3வது காலாண்டில் 5,91,017 என்ற எண்ணிக்கையில் உலகில் முழுவதும் விற்பனையாகியுள்ளன. ஹோண்டா ஆக்டிவா மாடலை பொறுத்தவரையில் 5,69,972 பைக்குகள் உலகம் முழுவதும் விற்பனையாகியுள்ளன.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

1994ஆம் ஆண்டில் முதல் முறையாக ஸ்பிளெண்டர் பைக்குகளை அறிமுகப்டுத்தியது ஹீரோ ஹோண்டா நிறுவனம். இது ஹீரோ என்ற இந்திய நிறுவனமும், ஹோண்டா என்ற ஜப்பானிய நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகும். ஸ்பிளெண்டர் பைக்குகள் முன்னதாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் கோலோய்ச்சி வந்த ஹீரோ ஹோண்டா ‘சிடி100' மாடலின் வழித்தோன்றல் ஆகும்.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

ஸ்பிளெண்டர் பைக்குகளின் அறிமுகம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையில் புதிய சாதனை படைத்தது. கிராமம், நகரம் என அனைத்து தரப்பினருக்கு ஏற்ற வகையில் இருந்ததோடு சிறந்த மைலேஜூம் கிடைத்தது இந்த பைக்கின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

ஓட்டுவதற்கு மென்மையாகவும், கட்டுப்படுத்த எளிமையாக இருந்த காரணத்தினாலும் பலருக்கும் இது பிடித்தமான பிராண்டாக விளங்கியது. ஆரம்ப காலத்தில் 100சிசி எஞ்சினுடன் வெளிவந்த ஸ்பிளெண்டர் பைக்குகள் காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களைக் கண்டது. 2014ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலான ஸ்பிளெண்டர்+ பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஹீரோ ஹோண்டா.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

2007 ஆம் ஆண்டில் அலாய் வீல்கள் மற்றும் சில கிராஃபிக்ஸ் மாற்றங்களுடன் மீண்டும் ஸ்பிளெண்டர்+ பைக்குகள் அறிமுகமாயின. 2011ஆம் ஆண்டில் ஸ்பிளெண்டர் ப்ரோ என்ற மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

இப்படி பல்வேறு மாறுதல்கள் அடைந்த போதிலும் குறிப்பிடத்தக்க மாற்றமாக ‘ஹீரோ ஹோண்டா' என்ற நிறுவனம் 2011ஆம் ஆண்டில் இருவேறு நிறுவனங்களாக பிரிந்தது. அதன் பின்னர் ‘ஹீரோ மோட்டோ கார்ப்' என்ற நிறுவனத்தின் கீழ் ஸ்பிளெண்டர் பைக்குகள் புதிய பரினாம வளர்ச்சி பெற்றன.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

2014ஆம் ஆண்டில் ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட் என்ற புதிய மாடல் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்ட நெடிய காலமாக மக்களுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து வரும் ஸ்பிளெண்டர் பைக்குகளை தற்போது அடுத்த தலைமுறையினரும் ஓட்டத் தொடங்கியுள்ளனர்.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

இந்திய சாலைகளில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் பயணம், 25 ஆண்டுகள் என்ற மாபெரும் வெள்ளி விழா சாதனையை படைக்க காத்திருக்கின்றன. இந்தியாவில் பாரம்பரியமிக்க பைக் பிராண்டாகவும் இவை விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்!

காலத்திற்கு தகுந்தவாறு மாறுதல்களை அடைந்து வரும் ஸ்பிளெண்டர்

பைக்குகள் தற்போது நவீன டெக்னாலஜி புகுத்தப்பட்டவையாக வெளிவருகிறது. பிளென்டர் ஐ-ஸ்மார்ட் 110 பைக்கினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ மோட்டார்ஸ்.

பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
In the third quarter of the current financial year, Hero MotoCorp sold a total of 5,91,017 two-wheelers.
Story first published: Wednesday, March 1, 2017, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X