ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் விரைவில் வருகிறது!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Written By:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று எக்ஸ்ட்ரீம். அந்த பிராண்டில் சக்திவாய்ந்த பைக் மாடல் ஒன்றை கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் என்ற பெயரிலான அந்த மாடல் அப்போதே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், அந்த புதிய பைக் மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சற்று பிரிமியம் ரகத்தில் வரும் இந்த புதிய 200சிசி ஹீரோ பைக் ரூ.90,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 150 மாடலில் டிசைன் தாத்பரியங்களை இந்த பைக் மாடலும் பெற்றிருக்கும். ஆனால், வண்ணங்கள் மற்றும் ஸ்டிக்கர் அலங்காரத்தில் சற்று வேறுபாடுகளை கொண்டதாக இருக்கும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் 200சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 18.5 பிஎச்பி பவரையும், 17.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் 200சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 18.5 பிஎச்பி பவரையும், 17.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய பைக் மாடல் அப்பாச்சி ஆர்டிஆர் 200 மற்றும் கேடிஎம் ட்யூக் 200 பைக் மாடல்களுடன் போட்டி போடும். விரைவில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆடி க்யூ8 கான்செப்ட் காரின் படங்கள்!

மிக உயர் வகை சொகுசு எஸ்யூவி மாடல் கான்செப்ட் ஒன்றை ஆடி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ படங்களை இந்த செய்தியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Hero Xtreme 200S will compete with likes of Bajaj Pulsar 200NS, TVS Apache RTR 200 and KTM 200 Duke.
Please Wait while comments are loading...

Latest Photos