ட்வின் ரேலி மோட்டார் சைக்கிளின் தயாரிப்பு பதிப்பை வெளியிட்டது ஹோண்டா

ரேலிகளில் ஓட்டப்படும் தனது புதிய இருசக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. ட்வின் ரேலி மோட்டார் சைக்கிள் என பெயரிடப்பட்டுள்ள இந்த வண்டியை குறித்து இனி பார்க்கலாம்.

Written by: Azhagar

பிரபல ஹோண்டா நிறுவனம் தனது ட்வின் ரேலி மோட்டார் சைக்கிள் சீரிஸில், 3வது மாடலை வெளியிட்டுள்ளது. பார்த்தல் மிரட்டும் தோற்றம் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்கள் இலகுவான கணத்துடன் உள்ளது என்பதை அறிந்தபோது நம்மால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

ஹோண்டாவின் ட்வின் மோட்டர் சைக்கிள்கள், கடந்தாண்டு இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள்களுக்கான கண்காட்சியில் ஸ்போர்ட்ஸ் மாடலாக மட்டும் இடம்பெற்றிருந்தன. தற்போது இதற்கான தயாரிப்பு பதிப்பை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ட்வின் ரேலி மோட்டார் சைக்கிளில் எஞ்சின் மற்றும் பிடிமானத்திற்கான மட்டுமே உலோகங்கள் உள்ளன, பெரும்பாலும் கார்பன் ஃபைபரால் ஆன பாகங்களே உள்ளன, அதனாலேயே இது எடைகுறைவாக உள்ளது. இது எடை குறைவாக இருப்பதற்கு மேலும் ஒரு காரணம் உள்ளது, அது வண்டியில் பொருத்தப்பட்டு இருக்கும் எல்இடி விளக்குகள்.

ஆஃப் ரோடு, ரேஸ்களில் ஓட்டப்படும் வண்டி என்பதால், எடைகுறைவாக இருந்தால் மட்டுமே வண்டியை கட்டுபாட்டிற்குள் வைக்கமுடியும். மேலும் ஹோண்டா இதற்கு முன்பாக, இதே சீரிஸில் 2016ல் வெளியிட்ட parallel-twin வண்டியை விட ட்வின் ரேலி மோட்டார் சைக்கிள் 5பி எச் பி பவரை கூடுதாலக தரும் திறன் பெற்றது.

வண்டியின் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கும்போது, எந்தவிதமான இடையூறுமின்றி நமக்கு ஏற்றவாறு திருப்புவதற்கு பில்லட்டில் அலுமனியத்தால் செய்யப்பட்ட கிளாம்புகள் பொருத்தப்பட்டுள்ளன, க்ராஷ் கார்ட்ஸ், ஸ்கிட் பிளேட், துருபிடிக்காத பிரேக் வையர்கள், ஃபேன் கார்ட்ஸ் ஆகியவற்றிலும் ட்வின் ரேலி மோட்டார் சைக்கிள்கள் கவனம் ஈர்க்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் ட்வின் ரேலி மோட்டார் சைக்கிள்களின் விலை 21490 யூரோக்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இந்திய மதிப்பில் இது 15 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். அதேபோல இந்த வண்டிகள் மேலும் dual-clutch அமைப்பிலும் வெளிவருகிறது, அதனுடைய 16. லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ட்வின் ரேலிட் மோட்டர் சைக்கிள்கள் பெரும்பாலும், டிராக்குள், ஆஃப் ரோடு ஆகியவற்றில் தான் ஓட்டப்படும் என்பதால், அவை விற்பனைக்கு வரும்போது அனைத்து மார்கெட்டுகளில் கிடைக்குமா என்பது தற்போது வரை சந்தேகமாக உள்ளது.

எங்களது வலைதளத்தில் அதிகளவில் பார்க்கப்பட்ட பைக்குகளில் புகைப்படங்களை காண கீழே உள்ள தொகுப்பை க்ளிக்குங்கள்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Honda Africa Twin Rally is 7kg lighter than its OEM predecessor, thanks to carbon fiber parts and a minimalist LED headlight assembly.
Please Wait while comments are loading...

Latest Photos