இந்தியாவில் புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்குக்கு புக்கிங் துவக்கம்..!

இந்தியாவில் புதிய சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்குகளுக்கான புக்கிங்குகளை ஹோண்டா நிறுவனம் பெறத்துவங்கியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 'ஃபயர் பிளேடு'என்று செல்லமாக அழைக்கப்படும் சிபிஆர் 1000ஆர்ஆர் சூப்பர் பைக்குக்கான புக்கிங்குகளை இந்தியாவில் பெறத் துவங்கியுள்ளனர்.

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம், 1955ஆம் ஆண்டு துவங்கப்பட்டது முதலே உலகின் பெரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் ஏறத்தாழ 300 மாடல்களில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் சிறந்த மாடலாக விளங்குவது ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் சூப்பர் பைக் தான். உலகம் முழுவதிலும் தனி ரசிகர் படையை பெற்றுள்ள இந்த பைக்கை ‘ஃபயர் பிளேடு' என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக் தற்போது 25வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இதனையொட்டி வெள்ளி விழா ஆண்டு சிறப்பு எடிஷன் சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது ஹோண்டா நிறுவனம்.

இந்த பைக்குகளுக்கான புக்கிங்குகளை ஹோண்டா நிறுவனத்தின் பிரத்யேக விங் வோர்ல்டு ஷோரூம்களில் பெறத்துவங்கியுள்ளது அந்நிறுவனம். இந்த ஷோரூம்கள் மும்பை மற்றும் டெல்லியில் மட்டுமே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேரியண்ட்கள்

இந்த சூப்பர் பைக்குகள் ‘சிபிஆர்1000 ஆர்ஆர் ஃபயர் பிளேடு' மற்றும் ‘சிபிஆர்1000 ஆர்ஆர் ஃபயர் பிளேடு எஸ்பி' ஆகிய இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது.

இவை வெளிநாடுகளில் முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு (Completely Build Unit) இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

சிறப்பு அம்சங்கள்

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் ஃபயர் பிளேடு சூப்பர் பைக் என்னற்ற அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், செமி-ஆக்டிவ் ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன், திராட்டில்-ஃபை-வயர் தொழில்நுட்பம்.

சிறப்பு அம்சங்கள்

9 அளவுகளில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் டார்க் கண்ட்ரோல், செலக்டபிள் இஞ்சின் பிரேக்கிங், ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்டீரிங் டேம்பர், ஹை ரெசொல்யூசன் டிஃஎப்டி டிஸ்பிளே மானிட்டர் மற்றும் பவர் செலக்டர் ஆகிய வசதிகளும் உள்ளது.

இஞ்சின் திறன்

வெள்ளி விழா ஆண்டு சிறப்பு எடிஷன் ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபயர்பிளேடு பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு 999சிசி இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 189 பிஹச்பி ஆற்றலையும், 114 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் குயிக் ஷிஃப்டருடன் கூடிய 6 வேக கியர் பாக்ஸ் உள்ளது.

விலை விபரம்

புதிய ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் சூப்பர் பைக்கின் ஃபயர்பிளேடு வேரியண்ட் ரூ.17.6 லட்சத்திற்கும், ஃபயர்பிளேடு எஸ்பி வேரியண்ட் ரூ.21.7 லட்சம் என்ற விலையிலும் கிடைக்கும். (டெல்லி எக்ஸ்ஷோரூம்). இதன் மும்பை ஷோரூம் விலை 1.5 லட்சம் கூடுதலாக இருக்கும்.

தற்போது இந்தியாவில் கிடைக்கக்கூடிய 1.0 லிட்டர் இஞ்சின் அளவு கொண்ட பைக்குகளிலேயே இந்த பைக் தான் குறைந்த விலை கொண்டதாக இருக்கிறது.

இதே இஞ்சின் திறன் கொண்ட கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் இசட்எக்ஸ்-10ஆர்ஆர் பைக்குகளின் விலை முறையே ரூ.18.1 லட்சம் மற்றும் 21.9 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது.

இதே போல பிஎம்டபிள்யூவின் எஸ்1000 ஆர்ஆர் மற்றும் எஸ்1000 ஆர்ஆர் ப்ரோ பைக்குகளின் விலை முறையே ரூ.18.9 லட்சம் மற்றும் 21.4 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது.

யமஹா ஆர்1 மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ்வி-4 பைக்குகளில் விலையும் கூட ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக் விலையை விட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா நிறுவன பைக்குகளிலேயே அதிக பவர் கொண்டதும், அதிக வேகம் கொண்டதும், எடை குறைவானதும் சிபிஆர் 1000ஆர்ஆர் ஃபயர்பிளேடு சூப்பர் பைக் தான் என்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத்தலைவர் யத்வீந்தர் சிங் குலேரிய குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about honda cbr 1000rr fireblade bike booking commences in delhi, mumbai exclusive honda showrooms.
Please Wait while comments are loading...

Latest Photos