ரூ.42,499 விலையில் புதிய ஹோண்டா க்ளிக் 110சிசி காம்பாக்ட் ஸ்கூட்டர் அறிமுகம்..!!

Written By:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், புதிய 'க்ளிக்' ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டாவின் க்ளிக் ஒரு தனித்துவமான டிசைன் கொண்ட யுடிலிட்டி ஸ்கூட்டர் ஆகும். இதன் ஒட்டுமொத்த டிசைனும் நவி ஸ்கூட்டரை அடிப்படையாகக்கொண்டுள்ளது.

இருப்பினும் இதன் பாடி வேலைப்பாடுகள் இதர ஸ்கூட்டர்களில் இருந்து இதனை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. க்ளிக் ஸ்கூட்டர் கிராமப்புற பகுதி மக்ககளை மனதில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டரில் பெரிய சீட், அதிகமான ஸ்டோரேஜ் வசதி, டியூபுலர் க்ரேப் ரெயில்கள் என தனித்துவ அம்சங்களும் உள்ளது.

புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டரில் பெரிய சீட், அதிகமான ஸ்டோரேஜ் வசதி, டியூபுலர் க்ரேப் ரெயில்கள் என தனித்துவ அம்சங்களும் உள்ளது.

க்ளிக் ஸ்கூட்டரின் சீட் உயரம் 743மிமீ என குறைவானதாக உள்ளது. மேலும் இது பெண்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உயரம் குறைவானவர்களும் எளிதில் இதனை ஹேண்டில் செய்ய முடியும்.

எடை குறைவானதாகவும், அகலம் குறைவானதாகவும் இருப்பதால், பெண்களால் இதனை எளிதாக ஓட்டவும், ஹேண்டில் செய்ய முடியும்.

இதில் 3.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இது நவி மற்றும் ஆக்டிவா மாடல்களைக் காட்டிலும் குறைவானதாகவே உள்ளது.

மேலும் புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டரில் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம், பிளாக் பேட்டர்ன் டயர்கள், அகலமான காலடி வசதி, மொபைல் சார்ஜிங் வசதி, டியூப்லெஸ் டயர்கள் மற்றும் பராமரிப்பு தேவைப்படாத பேட்டரி என பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா க்ளிக்-ல் அதிகபட்சமாக 8.04 பிஹச்பி ஆற்றலையும், 8.94 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 109.19சிசி இஞ்சின் உள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 83 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா க்ளிக் ரூ.45,499 (டெல்லி எக்ஸ்ஷோரூம்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

விலை அடிப்படையில் பார்க்கும் போது டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி ஸெஸ்ட் மாடல் புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விளங்கும் என கருதப்படுகிறது.

விலை அடிப்படையில் பார்க்கும் போது டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி ஸெஸ்ட் மாடல் புதிய ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விளங்கும் என கருதப்படுகிறது.

English summary
Read in Tamil about Honda launches new cliq scooter in india. price, details
Please Wait while comments are loading...

Latest Photos