ஹோண்டா நவி அட்வென்ச்சர் மற்றும் க்ரோம் எடிசன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா நவி ஸ்கூட்டரின் இரண்டு விசேஷமான மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

Written By:

கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஹோண்டா நவி ஸ்கூட்டரின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா நவி அட்வென்ச்சர் எடிசன் மற்றும் க்ரோம் எடிசன் என இரண்டு மாடல்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். இந்த இரண்டு மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா நவி ஸ்கூட்டரின் அட்வென்ச்சர் எடிசன் ரூ.48,173 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஹோண்டா நவி க்ரோம் எடிசன் மாடல் ரூ.44,173 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஹோண்டா நவி ஸ்பெஷல் எடிசன் மாடல்களிலும் 109.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.83 என்எம் டார்க் திறனையும் இந்த ஸ்கூட்டர்கள் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா நவி அட்வென்ச்சர் எடிசன் ஸ்கூட்டரில் விசேஷ வண்ணக் கலவை மற்றும் ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஹெட்லைட் க்ரில், விண்ட் ஷீல்டு, சீட் கவர், லக்கேஜ் பாக்ஸ் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஹோண்டா நவி க்ரோம் எடிசன் ஸ்கூட்டரில் ஹெட்லைட் புரொடெக்டர் க்ரில், லக்கேஜ் பாக்ஸ் உள்ளிட்டவற்றுடன் விசேஷ அலங்கார ஸ்டிக்கருடன் விற்பனைக்கு கிடைக்கும்.

ஹோண்டா நவி அட்வென்ச்சர் எடிசன் மற்றும் க்ரோம் எடிசன் மாடல்கள் கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். ரூ.1,000 முன்பணத்துடன் ஹோண்டா இருசக்கர வாகன விற்பனையகங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஹோண்டா நவி மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் இந்த மாடல்களை முன்பதிவு செய்ய முடியும்.

விற்பனையில் ஹோண்டா நவி எதிர்பாராத அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு முதல் ஆறு மாதங்களில் 50,000க்கும் மேற்பட்ட ஹோண்டா நவி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி துவங்கப்பட்டு இருக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Honda Navi Adventure edition launched in India. The company has also launched the Honda Navi Chrome edition. The special edition Navi's are available for booking.
Please Wait while comments are loading...

Latest Photos