இந்தியளவில் 60,000 நவி மினிபைக்குகள் விற்பனை: ஹோண்டா

2016 ஆண்டில் மட்டும் நவி மினி பைக்குகள் 60000 எண்ணிக்கையில் இந்தியளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது

By Azhagar

கடந்தாண்டில் டெல்லியில் நடைபெற்ற எக்ஸ்போவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்த மாடல், நவி மினி பைக்குகள் .கியர் பைக்குகளுக்கான தோற்றமிருந்தாலும் இதை ஓட்ட கியர் தேவையில்லை.

விற்பனையில் நவி மினி பைக் சாதனை..!

கியர் வேண்டாம் என்பதாலேயே, நவி மினி பைக்குகள் இந்திய சந்தையில் கிடுகிடுவென பிரபலமாயின. குறிப்பாக ஆண்களை விட பெண்களிடமும் இந்த மினி பைக்குகள் வரவேற்பு பெற்றன.

விற்பனையில் நவி மினி பைக் சாதனை..!

மோட்டார் சைக்கிள் மாடலில் உள்ள ஹோண்டா நவி பைக்கில் இருக்கும் 109.2 சிசி எஞ்சின் 7.8 பிஎச்பி பவரை வழங்கும் திறன் கொண்டது.

விற்பனையில் நவி மினி பைக் சாதனை..!

சிவிடி கியர் பாக்ஸ் கொண்ட நவி மினி பைக்கில், சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஹோண்டா காப்புரிமை பெற்றுள்ள ஹோண்டோ ஈகோ டெக்னாலஜி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்சின் ஹோண்டாவின் மற்றொரு ஹிட் மாடலான ஆக்டிவா ஸ்கூட்டரிலும் உள்ளது.

விற்பனையில் நவி மினி பைக் சாதனை..!

இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுகாரா ஹோண்டா டூ-வீலர் தொழிற்சாலையில், நவி மினி பைக்கிறான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

விற்பனையில் நவி மினி பைக் சாதனை..!

அப்போது சாதரண நிலையில், குறைந்த விற்பனை இலக்கில் தயாரிக்கப்பட்ட இந்த பைக்குகள், தற்போது மக்களின் ஆதரவால், அமோக விற்பனையை இந்தியளவில் பெற்றுள்ளது.

விற்பனையில் நவி மினி பைக் சாதனை..!

ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருந்த நவி மினி பைக்குகள் தற்பொழுது நோபால் ஆட்டோ சந்தையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

Most Read Articles
English summary
Honda Navi mini bike sales has crossed the 60,000 mark within one year of its launch. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X