ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்குக்கு போட்டியாக ஹோண்டா எஸ்ஆர்இ300 பைக் விரைவில் அறிமுகம்..!

Written By:

இந்தியாவில் 500சிசிக்கு குறைவான இஞ்சின் அளவு கொண்ட நடுத்தர சாகச ரக பைக் பிரிவை ஆட்கொள்ள இருசக்கர தயாரிப்பு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நடுத்தர இஞ்சின் கொண்ட சாகச பைக்குகளுக்கான இந்த பிரிவு என்பது தீடீர் டிமாண்டை சந்தித்து வருகிறது.

இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டு வரும் கேடிம் நிறுவனம் இந்த செக்மெண்டில் தனது புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதே செக்மெண்டில் பிஎம்டபிள்யூ தனது ஜி310 ஜிஎஸ் மாடலையும், கவாஸாகி நிறுவனம் தனது வெர்சிஸ்300 மாடலையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில், தான் மட்டும் சளைத்தவனா என்பது போல ஹோண்டா நிறுவனமும் எஸ்ஆர்இ300 என்ற அட்வெஞ்சர் ரக பைக்கை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் இந்த செக்மெண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த செக்மெண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

எனினும், விற்பனை சரிவு காரணமாக இம்பல்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ நிறுவனம் சமீபத்தில் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த செக்மெண்டில் தனிக்காட்டு ராஜாவாக ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் பைக் மட்டுமே இருந்து வருகிறது.

இந்த பைக்கில் சில பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், தரம் இல்லை என்றும் தொடர் பிரச்சனை ஏற்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் உரிமையாளர் ஒருவர் சமீபத்தில் இந்நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.

இந்தியாவில் நடுத்தர அட்வெஞ்சர் ரக பைக்குகளுக்கு பலமான தேவை இருந்து வருகிறது. இதன் காரணமாகவே நிறுவனங்கள் தங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த போட்டி போட்டு வருகின்றன.

இந்தியாவில் விரைவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்த இள்ள புதிய எக்ஸ்ஆர்இ 300 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 291சிசி காற்றால் குளிர்விக்கப்படும் இஞ்சின் உள்ளது.

இந்தியாவில் விரைவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்த இள்ள புதிய எக்ஸ்ஆர்இ 300 பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 291சிசி காற்றால் குளிர்விக்கப்படும் இஞ்சின் உள்ளது.

அப்-ரைட் என்ற சொகுசான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் தொலைதூர பயணத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக நீளமான சஸ்பென்ஷன், சீட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் டைஸ் பிரேக்குகள் உள்ளது. சீட்டின் கீழ் எக்ஸாஸ்ட் பைப் கவர்ச்சிகரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக்கிங் ஆப்ஷனலாக வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது. 21 இஞ்ச் அளவுள்ள முன் வீல், 18 இஞ்ச் அளவுள்ள பின் வீல் இதில் உள்ளது.

13.8 லிட்டர்கள் அளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 259 மிமீ ஆக உள்ளது. பைக்கின் எடை 146 கிலோவாகும்.

இந்த பைக்கின் விலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரையிலும் வெளியாகவில்லை.

எனினும், கடும் போட்டியில் உள்ள இந்த செக்மெண்டில் ஹோண்டா நிறுவனம் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் இதன் விலையை நிச்சயம் சவால் நிறைந்ததாக நிர்னயித்தால் தான் எடுபடும்.

எனினும், கடும் போட்டியில் உள்ள இந்த செக்மெண்டில் ஹோண்டா நிறுவனம் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் இதன் விலையை நிச்சயம் சவால் நிறைந்ததாக நிர்னயித்தால் தான் எடுபடும்.

இந்த முறை அந்த தவறை ஹோண்டா நிறுவனம் செய்யாது என்றே கருதப்படுகிறது. இந்த பைக் ரூ. 2.2 லட்சம் அல்லது அதற்கும் கீழ் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil about Honda's new adventure bike xre300 launch in india. price,mileage, specs and more.
Please Wait while comments are loading...

Latest Photos