யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்கள் கூட்டணி வைத்து மோசடியில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்தோனேஷியாவில் செயல்பட்டு வரும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான 'பிடி யமஹா இந்தோனேசியா மோட்டார் மேனுபேஃக்சரிங் (YIMM)' மற்றும் 'பிடி அஸ்த்ரா ஹோண்டா மோட்டார்(AHM)' ஆகிய இரண்டும் இருசக்கர வாகன விலை நிர்ணயத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

யமஹா மற்றும் அதன் போட்டி நிறுவனமான ஹோண்டா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படும் அதன் ஸ்கூட்டர் மாடல்களை, கூட்டணி அமைத்துக்கொண்டு அதிக விலை வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

இது குறித்து இந்தோனியாசியாவில் தன்னாட்சி பெற்ற அமைப்பான ‘தொழிற்போட்டிகளுக்கான மேற்பார்வை கமிஷன்' கடந்த 120 நாட்களாக ஆராய்ந்து வந்தது.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

இதில், இந்த இறுநிறுவனங்களுமே குறிப்பாக அதன், 110 சிசி மற்றும் 125சிசி ஸ்கூட்டர் மாடல்களின் விலையை சமீப காலத்தில் முறையற்ற முறையில் நிர்னயம் செய்திருப்பது தெரியவந்தது.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

ஹோண்டா நிறுவனம் 3 முறையும், யமஹா நிறுவனம் 5 முறையும் அதன் ஸ்கூட்டர் விலைகளை ஏற்றி வந்தது தெரியவந்திருப்பதாக தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் , குறிப்பிட்டுள்ளனர். இது விதிகளை மீறிய செயலாகவும், தொழிற்போட்டியில் நேர்மையற்ற செயலாகவும் அமைந்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

இந்த காரணங்களுக்காக விதிமீறலில் ஈடுபட்டதற்காக இரண்டு நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தோனேசிய மதிப்பில் 25 பில்லியனும் ( இந்திய மதிப்பில் ரூ.11.27 கோடி), யமஹா நிறுவனத்திற்கு 25 பில்லியனும் (இந்திய மதிப்பில் ரூ.12.53 கோடி) அபராதமாக விதிக்கப்பட்டது.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

இதனை ஏற்க மறுத்த இரண்டு நிறுவனங்களும் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளன. எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சட்டப் பிரிவின் பொது மேலாளர் ஹர்டாண்டோ, யமஹா நிறுவனத்துடன் கூட்டணி எதுவும் வைத்து ஹோண்டா செயல்படவில்லை என்றும் இது தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கூறினார்.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

யமஹா மற்றும் ஹோண்டா ஆகிய இரண்டு நிறுவனங்களுமே உலக சந்தையில் போட்டியாளர்களாக விளங்கும் போது கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தையும் முன்வைத்தார் ஹர்டாண்டோ.

யமஹா - ஹோண்டா நிறுவனங்களுக்கு விதிமீறலுக்காக அபராதம்

இந்த தீர்ப்பு மூலம் இந்தோனியாவில் முதலீடு செய்பவர்கள் சற்று யோசித்து செயல்படுவார்கள் என்ற காரணத்தால், வெளிநாடு முதலீடு பாதிக்கும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.

யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்திய 250சிசி எஃப் இசட்-25 மாடல் பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
Two-wheeler manufacturing giants Honda and Yamaha are fined for engaging in cartel practice in sales of automatic scooters 110c and 125cc.
Story first published: Wednesday, February 22, 2017, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X