கவாஸாகி இஆர்-6என் பைக்கிற்கு ஒரு லட்ச ரூபாய் டிஸ்கவுண்ட்!!

Written By:

கவாஸாகி நிறுவனத்தின் நேக்கட் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான இஆர்-6என் பைக் தற்போது பிஎஸ்-3 எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் அனைத்து இருசக்கர வாகனங்களும் பிஎஸ்-4 தர வரைமுறைகளுடன் விற்பனை செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, பிஎஸ்-4 எஞ்சினுடன் இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கவாஸாகி இஆர்-6என் பைக் இருப்பில் தேங்கி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, பிஎஸ்-3 எஞ்சினுடன் இருப்பில் தேங்கி நிற்கும் இஆர்-6என் பைக்கிற்கு அதிரடி தள்ளுபடிகளை கவாஸாகி வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

மும்பையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கவாஸாகி டீலர்களில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி தரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, பெங்களூரில் உள்ள டீலரில் வினவியபோது, கவாஸாகி நிறுவனத்தின் சார்பில் நேரடியாக ரூ.30,000 வரை தள்ளுபடி தரப்படுவதாக தெரிவித்தனர்.

அதேநேரத்தில், இருப்பு உள்ள பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட காவாஸாகி இஆர்-6என் பைக்குகளுக்கு பேரம் பேசினால் குறைந்தபட்சம் ரூ.50,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த விஷயத்தில் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள இஆர்-6என் பைக்கிற்கு பதிலாக புதிய இசட்650 பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கவாஸாகி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

எனவே, இருப்பு உள்ள பைக்குகளுக்கு நிச்சயம் அதிகபட்சமான தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் கவாஸாகி இஆர்-6என் பைக் விற்பனைக்கு வந்தது. விற்பனை சரியில்லாத நிலையில், கடந்த ஆண்டு ரூ.27,000 வரை இந்த பைக்கின் விலையை கவாஸாகி குறைத்தது.

அதற்கும் புண்ணியமில்லாமல் போகவே, இப்போது இருப்பில் தேங்கியுள்ள இஆர்-6என் பைக்குகளுக்கு அதிரடியாக தள்ளுபடியை கவாஸாகி நிறுவனமும், அதன் டீலர்களும் வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

கவாஸாகி இஆர்-6என் பைக்கில் 72.1 பிஎஸ் பவரை வழங்க வல்ல 649சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில், கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், இந்த பைக் இந்தியாவில் இருந்து முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படுவதை மனதில் வைத்து முடிவு செய்யவும்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #கவாஸாகி #kawasaki
Story first published: Thursday, March 9, 2017, 16:29 [IST]
English summary
Read in Tamil: Huge Discount on Kawasaki ER-6N Bike.
Please Wait while comments are loading...

Latest Photos