ஹைதராபாத் போலீசாருக்கு ரீகல் ராப்டர் மோட்டார்சைக்கிள்!

Written By:

சக்திவாய்ந்த பைக்குகளில் போலீசார் சீறிப் பாய்ந்து வில்லனை பிடிக்க செல்லும் சாகச காட்சிகள் ஹாலிவுட் படங்களில் சர்வ சாதாரணமாக வைக்கப்படுகிறது. சினிமாவில் என்றில்லாமல், பல வெளிநாடுகளில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களை கண்காணிப்பு பணிகளுக்காக போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் குஜராத் மாநிலத்தில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை அம்மாநில போலீசார் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹைதராபாத் போலீசாரும் விரைவில் காஸ்ட்லி மோட்டார்சைக்கிள்களில் ரோந்து சுற்ற உள்ளனர். ஆம், இதற்காக அவர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் தயாராகி வருகின்றன.

சீனாவை சேர்ந்த லைஃபெங் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த ரீகல் ராப்டர் என்ற நிறுவனத்தின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மாடலைத்தான் ஹைதராபாத் போலீசார் பயன்படுத்த இருக்கின்றனர்.

ரீகல் ராப்டர் நிறுவனத்தின் டிடி-350இ-9பி என்ற க்ரூஸர் மோட்டார்சைக்கிள்தான் இப்போது ஹைதராபாத் போலீசாரின் கைகளுக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஜிபிஎஸ் டிராக்கர் கருவி, சைரென் மற்றும் சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சாலையில் அறிவிப்புகளை வெளியிடுவதற்கான மைக் செட் மற்றும் ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டு இருக்கின்றது. வெள்ளை- நீல வண்ணக் கலவை கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், போலீஸ் வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளில் 320சிசி வாட்டர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடன், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 22.8 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க் திறனையும் இந்த மோட்டார்சைக்கிள் வழங்கும்.

டெல்பி நிறுவனத்தின் இசியூ கம்ப்யூட்டரின் அடிப்படையில் இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் இயங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள் 180 கிலோ எடை கொண்டது. ரூ.2.96 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் குறைவான விலை ஃபேப் ரீகல் ராப்டர் மோட்டார்சைக்கிள் மாடல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரீகல் ராப்டர் நிறுவனமானது ஹைதராபாத் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபேப் மோட்டார்ஸ் துணையுடன் இந்தியாவில் வர்த்தகத்தை கடந்த ஆண்டு துவங்கியது. ஹைதராபாத் நகரில் மோட்டார்சைக்கிள் ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளது ஃபேப் ரீகல் ராப்டர் கூட்டணி நிறுவனம்.

நம் நாட்டு மார்க்கெட் மட்டுமின்றி, அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் மோட்டார்சைக்கிள் ஏற்றுமதியை துவங்க முடிவு செய்து வைத்துள்ளது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

English summary
Hyderabad Police To Use Fully Equipped Fab Regal Raptor Motorcycles Soon.
Please Wait while comments are loading...

Latest Photos