கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகிவரும் இருசக்கர வாகன பிராண்டாக கேடிஎம் உயர்ந்து வருகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இருசக்கர வாகன தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஆஸ்திரிய நிறுவனம் கேடிஎம். இதன் பைக்குகள் தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் பவர் காரணமாக உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கேடிஎம் நிறுவன பைக்குகள் அதிகளவில் விற்பனை ஆகிவரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கேடிஎம் நிறுவனத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பங்குதாரராக விளங்குகிறது.

கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

கடந்த ஆண்டில் கேடிஎம் பைக்குகள் அதிகம் விற்பனை ஆகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் 36,000 பைக்குகளை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த எண்ணிகையை விட 1,000 பைக்குகளை அதிகமாக அமெரிக்காவில் விற்பனை செய்திருந்தது.

கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

இந்நிலையில் சமீபத்தில் கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் விற்பனை ஆகும் ட்யூக் வரிசையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. இதில் ட்யூக்200, ட்யூக்250 மற்றும் ட்யூக்390 ஆகிய மாடல்கள் அடங்கும்.

கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

புதிய வரவுகள் மூலம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதிய உற்சாகத்தை பெற்றுள்ளது கேடிஎம் நிறுவனம். இப்புதிய வரவுகள், அந்நிறுவனத்தின் விற்பனை சந்தையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

இது தொடர்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ப்ரோ-பைக்கிங் பிரிவுத் தலைவரான அமித் நந்தி கூறும்போது, "சிறியளவிலான வித்தியாசத்திலேயே இந்தியா தற்போது கேடிஎம் பைக் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, கேடிஎம் விற்பனையில் இந்தியா முதலிடம் பெரும்" என்றார்.

கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

அவர் மேலும் கூறும்போது, கேடிஎம் பைக் விற்பனையில் இந்தியாவின் பங்கு மென்மேலும் உயர இருக்கிறது, புதிய மாடல்களின் அறிமுகம், கேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தை இந்த ஆண்டில் இரட்டிப்பாக உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.

கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

ஒவ்வொரு ஆண்டும் கேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் குறிப்பிட்ட அளவில் உயர்ந்து வருகிறது, கடந்த 5 ஆண்டுகளை பொறுத்தவரையில் 48% வளர்ச்சியை அடைந்துள்ளது கேடிஎம்.

கேடிஎம் பைக் விற்பனையில் அமெரிக்காவை முந்தும் இந்தியா!

சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ட்யூக்200 ரூ.1.43 லட்சமும், ட்யூக்250 பைக் ரூ.1.73 லட்சமும், ட்யூக்390 2.25 லட்ச ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. (அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில்)

புதிய 2017 கேடிஎம் ட்யூக்250 பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
KTM has been one of the fastest growing two-wheeler brands in the country.
Story first published: Friday, February 24, 2017, 15:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X