இந்தியாவின் அதிகம் ஏற்றுமதியாகும் பைக் இதுதான்... !!

Written By:

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பைக் மாடல் என்ற பெருமையை பஜாஜ் பாக்ஸர் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டில் 3.57 லட்சம் பாக்ஸர் மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், முந்தைய 2015-16 நிதி ஆண்டில் 6.07 லட்சம் பாக்ஸர் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி வெகுவாக சரிந்தது.

கடந்த நிதி ஆண்டில் 41 சதவீதம் ஏற்றுமதி சரிந்த போதிலும், தொடர்ந்து ஏற்றுமதியில் இந்தியாவின் நம்பர்-1 பைக் மாடல் என்ற பெருமையை பஜாஜ் பாக்ஸர் பெற்றிருக்கிறது.

பஜாஜ் சிடி100 பைக்கிற்கு மாற்றாக பஜாஜ் பாக்ஸர் பைக் 100சிசி மற்றும் 150சிசி பைக் மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்த்த அளவு பாக்ஸர் பிராண்டு விற்பனையை பதிவு செய்யவில்லை.

இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டில் பாக்ஸர் பிராண்டுக்கு குட்பை சொல்லிவிட்டு, மீண்டும் பஜாஜ் சிடி100 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பாக்ஸர் பைக் ஏற்றுமதி மட்டும் தொடர்ந்தது.

மேலும், குறைவான பட்ஜெட், அதிக மைலேஜ் போன்ற அம்சங்கள் பஜாஜ் பாக்ஸர் பிராண்டுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனால், ஏற்றுமதியில் இந்தியாவின் நம்பர்-1 பைக் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

பஜாஜ் பாக்ஸர் பைக்கிற்கு அடுத்து பஜாஜ் சிடி100 பைக்தான் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 2 லட்சம் சிடி100 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது இடத்தில் பஜாஜ் பல்சர் உள்ளது. மொத்தம் 1.5 லட்சம் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

நான்காவது இடத்தில் பஜாஜ் பாக்ஸர் 150 மாடல் இடம்பெற்றிருக்கிறது. மொத்தம் 1.40 லட்சம் பாக்ஸர் 150 பைக்குகள் ஏற்றுமதி செயய்ப்பட்டுள்ளன. இந்த நிலையில், பஜாஜ் பாக்ஸர் 150 பைக்கின் அட்வென்ச்சர் வகை மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஐந்தாவது இடத்தை ஸ்கூட்டர் மாடல் பெற்றிருக்கிறது. உடனே, ஹோண்டா ஆக்டிவா என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஹோண்டா டியோ ஸ்கூட்டர்தான் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 1.35 லட்சம் ஹோண்டா டியோ ஸ்கூட்டர்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, May 23, 2017, 12:59 [IST]
English summary
The largest exported motorcycle from India is the Bajaj Boxer and is not retailed in India.
Please Wait while comments are loading...

Latest Photos