10 நிமிடங்களில் விற்று தீர்ந்த இந்தியன் சீஃபடெய்ன் மோட்டார் சைக்கிள்

இந்தியன் மோட்டார் சைக்கிளின் புதிய தயாரிப்பான இந்தியன் சீஃப்டெய்ன் இருசக்கர வாகனம், விற்பனையின் புதிய சாதனை படைத்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

Written by: Azhagar

ஜேக் டேனியல்ஸ், இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தியன் சீஃப்டேய்ன் இருசக்கர வாகனம், வெளியான பத்தே நிமிடங்களில் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. கடந்த திங்கள்கிழமை இந்தியப் நேரப்படி 12 மணியளவில் தொடங்கிய இதற்கான முன்பதிவு பத்தே நிமிடங்களில் முடிந்ததுள்ளது, இது ஆட்டோமொபைல் வரலாற்றில் ஒரு சாதனையாக மாறியுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வெளியாகியுள்ள இந்தியன் சீஃப்டேய்ன் மாடலில், மொத்தம் 100 வாகனங்களே தயாரிக்கப்பட்டுள்ளன. ஜேக் டேனியல்ஸ், இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் கூட்டணியில் முதல் இரண்டு தயாரிப்புகளான இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்ட் மற்றும் இந்தியன் சீஃப் விண்டேஜ் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 8 மணிநேரங்களில் முடிந்தன.

இந்தியன் சீஃப்டேய்ன் மோட்டார் சைக்கிள் கருப்பு, வெள்ளை மற்றும் சார்கோல் ஆகிய நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் வண்டியில் 7 இடங்களில் ஜேக் டேனியல்ஸின் முத்திரை இடம்பெற்றுள்ளது. இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் 200 வாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்கும் ஆடியோ அமைப்பு ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகளும் இதில் உள்ளன.

சீஃப்டேய்னிற்கான முன்பதிவு வெறும் 10 நிமிடங்களில் முடிந்ததில் உற்சாகத்தில் உள்ளார் ஸ்டீவ் மென்னெட்டொ, இந்தியன் மோட்டார் சைக்கிளை நிர்வாகித்து வரும் போலாரிஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள ஸ்டீவ், இந்த சாதனைக்கு ஜேக் டேனியல்ஸுடன் ஏற்பட்ட ஒப்பந்தமே காரணம் என்கிறார். மேலும், இந்தியன் சீஃப்டேய்ன் அமெரிக்காவின் மதிப்பு என்றும், அதை தயாரித்ததில் இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் பெருமையடைவதாகவும் தலைவர் ஸ்டீவ் மென்னட்டோ தெரிவித்தார்.

போலாரிஸ் இண்டஸ்டிரீஸ், இந்தியன் சீஃப்டெய்ன் மோட்டார் சைக்கிளை தயாரித்திருந்தாலும், அதற்கான பின்னணியில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக வண்டிக்கான கவர் பேட்ஜை 'மொண்டானா சில்வர்ஸ்மித்'என்ற நிறுவனம் கையாலேயே வடிவமைத்துள்ளது. ஜேக் டேனியல்ஸின் முத்திரையை தாங்கி நிற்கும் அந்த கவர் பேட்ஜ் வண்டிக்கு ஒரு ராயாலான தோற்றத்தை தருகிறது.

இந்தியன் சீஃப்டெய்னில் பல கஸ்டமைஸ் விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. கையால் உருவாக்கப்பட்ட ஜேக் டேனியனில் கொடியில் வண்டி உரிமையாளரின் பெயர் ஹைலைட் செய்யப்பட்டு இருக்கும், மேலும் அந்த கொடியில் வண்டியின் எண் மற்றும் விண்டேஜ் மாடலுக்கான அடையாளங்களும் இடம்பெற்றிருக்கும்.

இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு சில ஆடம்பர வசதிகளும் சீஃப்டெய்ன் வண்டியில் உள்ளன. அதில், டிரைவிங்கிற்கு தகுந்தமாறி மாறும் விளக்குகள், பயணத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளும் வின்ஷீல்ட் மற்றும் இந்தியன் மோட்டார் சைக்கிளுக்கே உரித்தான இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் ஆகியவை சீஃப்டெய்ன் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றுள்ளன.

சுவிட்சலார்ந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன், நார்வே, பென்னலக்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் என ஒரு நாட்டுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் என்ற கணக்கில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின் நாடுகளிலும் சீஃப்டைன் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஆனால் இந்தியாவில் சீஃப்டைன் மாடலை யார் வாங்கியுள்ளார்கள் என்பதற்கான தகவல்களை தற்போது வரை இந்தியன் மோட்டார் சைக்கிள் தெரிவிக்கவில்லை.

டிரையம்ப் நிறுவனத்தின் புதிய போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் புகைப்படத் தொகுப்பை காணுங்கள்

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Tuesday, March 21, 2017, 16:45 [IST]
English summary
Indian Motorcycles' collaboration drives record-setting demand for show-stopping, custom-inspired cruiser.
Please Wait while comments are loading...

Latest Photos