விபத்தில் சிக்கி ரெண்டு துண்டான கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக்... !!

அதிவேகத்தில் சென்ற கவாஸாகி நின்ஜா 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதியதில், இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த கோர விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Written By:

கடந்த வாரம் கல்லூரி மாணவர்கள் மதுபோதையில் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறித்து எழுதியிருந்தோம்.

மணிக்கு 150 கிமீ வேகத்தில் சென்றபோது அந்த கார் சாலை தடுப்பில் மோதியதோடு, 8 அடி உயரம் அந்தரத்தில் பறந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி இரண்டாக பிளந்து நொறுங்கியது. பெற்றோரையும், பார்ப்போரையும் பதைபதைக்க வைத்தது.

அதிவேகம், மதுபோதை ஆகிய இரண்டும் சேர்ந்து அந்த மாணவர்களின் உயிருக்கு உலை வைத்துவிட்டது. அந்த சோக நிகழ்வு நினைவிலிருந்து அகல்வதற்குள் அடுத்த ஒரு பயங்கர விபத்து இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.

சாலையில் அதிவேகத்தில் சென்ற கவாஸாகி நின்ஜா 250ஆர் எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது பெட்ரோல் பங்க்கில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்தவர் படுகாயமடைந்து மருத்துமனையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு தகவலின்படி, இந்த விபத்தில் கவாஸாகி நின்ஜா 250ஆர் பைக் தவிர்த்து, சுப்ரா எக்ஸ்124, எக்ஸ்-ரைடு, என்-மேக்ஸ் 155 ஆகிய மேலும் 4 இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத வகையில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர் திசையில் வந்த என் மேக்ஸ் ஸ்கூட்டருடன் கவாஸாகி நின்ஜா 250ஆர் பைக் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் கவாஸாகி நின்ஜா 250ஆர் பைக் ரெண்டு துண்டானது. பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கர விபத்து அங்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நம் நாட்டிலும் இதேபோன்று, பொது சாலையில் சூப்பர் பைக்குகளில் அதிவேகத்தில் செல்வதும், பல பைக்குகளில் ஒரே நேரத்தில் போட்டிக் கொண்டு சேஸிங் செய்து செல்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு விஷயமாகிவிட்டது. ஆபத்தை அறியாமல் இதுபோன்று செய்யும் சாகசங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

அவர்களது உயிருக்கு மட்டுமில்லாமல், சாலையில் வரும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் இவர்கள் எமனாக மாறிவிடுகின்றனர். சுயக் கட்டுப்பாடு, சாலை விதிகள் பற்றிய போதுமான அறிவு உள்ளிட்டவை இல்லாததும், ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கான பயிற்சி இல்லாததுமே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாகி வருகின்றன.

இனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சில மணிநேர பயிற்சி அளித்து இதுபோன்ற சக்திவாய்ந்த இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் டெலிவிரி கொடுத்தால் இந்த விபத்துக்களை தவிர்க்க ஓரளவு உதவும். அதுவரை, சுயக் கட்டுபாடே இளைஞர்களை இதுபோன்ற விபத்துக்களிலிருந்து தவிர்க்க உதவும்.

Source: Iwanbanaran

கவாஸாகி நின்ஜா எச்2 கார்பன் சூப்பர் பைக்கின் படங்கள்!

மிரட்டலான கவாஸாகி நின்ஜா எச்2 கார்பன் சூப்பர் பைக்கின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்து காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Kawasaki Ninja 250 to Split Into Two In Ferocious Accident.
Please Wait while comments are loading...

Latest Photos