கவாஸாகி இசட்250 பைக்கிற்கு ரூ.57,000 தள்ளுபடி!

Written By:

அடுத்த மாதம் முதல் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தர அம்சம் பொருந்திய எஞ்சினுடன் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-4 எஞ்சினுடன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், இருப்பில் தேங்கி நிற்கும் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை விற்று தீர்க்கும் முனைப்பில் இருசக்கர வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, விலை உயர்ந்த பைக்குகளுக்கு அதிகபட்சமான தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது இருப்பில் உள்ள பிஎஸ்-3 கவாஸாகி இசட்250 பைக்கிற்கு ரூ.57,000 வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, மிகச் சிறப்பான விலையில் இந்த பைக்கை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதுதொடர்பாக, பெங்களூரில் உள்ள கவாஸாகி டீலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, நிறுவனம் தரப்பில் இருந்து அதிகபட்சமாக ரூ.27,000 தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவித்தனர். அதேநேரத்தில், பிஎஸ்-3 மாடலை விற்றுத் தீர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பேரம் பேசினால் கூடுதல் தள்ளுபடியை பெறும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது.

கவாஸாகி இசட்250 பைக்கில் இருக்கும் 249 பேரலல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 31.5 பிஎச்பி பவரையும், 21 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த தள்ளுபடி மூலமாக மிக குறைவான விலையில் கிடைக்கும் இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் மாடலாக கவாஸாகி இசட்250 மாறி இருக்கிறது.

இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புவோர், அருகிலுள்ள கவாஸாகி டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 

 

 

புதிய டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்கள்!

புதிய டாடா டாமோ ரேஸ்மோ காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Read in Tamil: Kawasaki dealerships in the country are offering huge discounts on the company's quarter litre naked motorcycle, the Z250.
Please Wait while comments are loading...

Latest Photos