கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் கேடிஎம் வரிசை பைக் மாடல்களில் புதிய வகை மாடல் ஒன்றும் விரைவில் இணைக்கப்பட இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

By Saravana Rajan

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆஸ்திரிய நாட்டு நிறுவனமான கேடிஎம் பைக் தயாரிப்புகளுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் மற்றும் ஆர்சி வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களின் வடிவமைப்பு எல்லோரையும் கட்டி போட்டு வைத்திருக்கிறது. பைக் உரிமையாளர்கள் தவிர்த்து, இந்தியாவில் பெரும் ரசிக வட்டத்தை கேடிஎம் பிராண்டு பெற்றிருக்கிறது.

 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

கேடிஎம் ஆர்சி வரிசையில் புதிய 390 மற்றும் 200 பைக் மாடல்கள் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இளைஞர்களின் கவனத்தை இந்த இரு ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களும் சுண்டி இழுத்துள்ளன. இந்த புதிய கேடிஎம் ஆர்சி 390 மற்றும் ஆர்சி200 பைக் மாடல்களின் அறிமுக விழாவில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

அதாவது, கேடிஎம் பிராண்டில் ட்யூக் வரிசையிலான நேக்கட் ஸ்டைல் பைக் மாடல்கள், ஆர்சி வரிசையில் ஃபேரிங் பேனல்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் தவிர்த்து, சாகச வகை பைக் மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இது கேடிஎம் ரசிகர்கள் மத்தியில் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

அதேநேரத்தில், கேடிஎம் அட்வென்ச்சர் வகை பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான காலக்கெடு எதையும் நிர்ணயம் செய்யவில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் ஏற்கனவே ஐரோப்பாவில் சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

சாலை சோதனை செய்யப்பட்டபோது ரகசியமாக எடுக்கப்பட்ட படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக் மாடலின் வடிவமைப்பு டக்கார் ராலியில் பங்கேற்பதற்கான சிறப்பசங்களை கொண்டிருப்பதை ஸ்பை படங்களில் காண முடிகிறது. நேவிகேஷன் சாதனத்தை பொறுத்துவதற்கான வசதியும் அதில் இருக்கிறது.

 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி 390 பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 373சிசி எஞ்சின்தான் கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக்கிலும் பயன்படுத்தப்படும். அதேநேரத்தில், எஞ்சினின் பவரை வெளிப்படுத்தும் திறன் வேறுபடும்.

 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

புதிய கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக்கின் முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகள் கொடுக்கபப்பட்டிருக்கின்றன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும். இந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் மாடலும் வருகிறது... ராஜீவ் பஜாஜ் தகவல்!

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாக இருக்கும். தவிரவும், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ், கவாஸாகி வெர்சிஸ் 300 ஆகிய அட்வென்ச்சர் பைக் மாடல்களுடன் இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக் மாடல் போட்டி போடும். அதேநேரத்தில், போட்டியாளர்களைவிட தனித்துவமான வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவை இந்த பைக்கிற்கு கூடுதல் மதிப்பை பெற்றுத் தரும்.

Spy Pictures

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் படங்கள்!

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Rajiv Bajaj confirmed plans for the KTM 390 Adventure during the KTM RC range launch in India. Here’s more details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X