ஐரோப்பிய வெர்ஷன் கேடிஎம் ட்யூக் 390 பைக் இந்தியாவில் விற்பனை... லிமிடேட் எடிசன் என சமாளிப்பு..

ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Written By:

கடந்த ஆண்டு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்த கண்காட்சியில் புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ணக் கலவைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் இந்தியாவிலும் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில் ஆரஞ்ச் வண்ணக் கலவையிலான கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடல் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தாலியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளை வண்ணத்திலான கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடல் ஐரோப்பிய மார்க்கெட்டுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் செய்த தவறு காரணமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்ல வேண்டிய கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆம், புனேயில் உள்ள பஜாஜ்- கேடிஎம் ஆலையில்தான் புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பைக்குகள் இந்தியா மட்டுமின்றி, பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையி்ல், ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளை வண்ணக் கலவையிலான கேடிஎம் ட்யூக் 390 பைக்குகளை சிலவற்றை பஜாஜ்- கேடிஎம் ஆலையில் இருந்த பணியாளர்கள் தவறுதலாக இந்தியாவில் உள்ள கேடிஎம் டீலர்களுக்கு பைக்குகளை எடுத்துச் செல்லும் டிரக்கில் ஏற்றி விட்டதாக தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள டீலர் ஒன்றில் வெள்ளை வண்ணக் கலவையிலான கேடிஎம் ட்யூக் 390 பைக் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ரஷ்லேன் தளத்தின் ஆசிரியர் கேடிஎம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

அப்போது, அது லிமிடேட் எடிசன் மாடல் என்று கேடிஎம் நிறுவன அதிகாரிகள் சமாளித்துள்ளனர். ஆனால், உண்மையில் இது ஆலையில் நடந்த தவறு காரணமாகவே விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெள்ளை வண்ண கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடல் யூரோ-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மாடல். மேலும், இது மிகவும் விசேஷ வண்ணக் கலவை என்பது இதனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் என்று நம்பலாம்.

மேலும், இந்தியாவில் விற்பனையாகும் கேடிஎம் பைக் மாடல்களில் அதிக சிறப்பம்சங்களை பெற்ற மாடல் கேடிஎம் ட்யூக் 390. தற்போது விற்பனையில் இருக்கும் கேடிஎம் ஆர்சி 390 மாடலைவிட விலை அதிகம் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

புதிய தலைமுறை கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் எல்இடி ஹெட்லைட் இடம்பெற்று இறுக்கிறது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மெட்ஸீலர் டயர்கள் போன்றவையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன. இந்த பைக் ரூ.2.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Mistakenly Sold European Version of New Duke 390 in India.
Please Wait while comments are loading...

Latest Photos