பைக்குகளுக்கான ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனம்: மேப்மை இந்தியா அறிமுகம்!

Written By:

விலை உயர்ந்த பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதே அளவுக்கு அந்த பைக்குகள் திருடு போகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருடு போகும் பைக்குகளை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில், பைக்குகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பு சாதனம் ஒன்றை மேப்மை இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரோவர் பைக் என்ற பெயரில் இந்த கண்காணிப்பு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் நுட்பத்தின் அடிப்படையில் இந்த சாதனம் பைக் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை மிக துல்லியமாக காட்டும். மேலும், எந்த கட்டடத்தின் அருகில் உள்ளது என்பது வரை காட்டும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும், வண்டி சென்று கொண்டிருந்தால் அதன் வேகம், செல்லும் திசை போன்ற தகவல்களையும் மொபைல்போன் மூலமாகவே உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக, ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆகியவற்றிற்கான விசேஷ செயலிகளை மேப்மை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

இந்த சாதனத்தின் விலை ரூ.3,990 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்திற்கு தேவையான சிம் கார்டு உள்ளிட்டவற்றையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த சேவையை பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.2,400 கட்டணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பல லட்சம் போட்டு வாங்கும் பைக்குகளை பாதுகாக்க இந்த சாதனம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று மேப்மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனத்தின் மூலமாக இக்னிஷன் ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா, அதிவேகமாக செல்வது, சர்வீஸ் ரிமைன்டர், இன்ஸ்யூரன்ஸ் காலாவதி உள்ளிட்ட பல எச்சரிக்கை தகவல்களையும் பெற முடியும்.

மொபைல்போன் எஸ்எம்எஸ் மூலமாக பெறுவதற்கு சிறப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இமெயில் மூலமாக இந்த தகவல்களை பெறுவதற்கு எந்த கட்டணமும் இல்லை என்று மேப்மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய ஆல்பம்!

இந்தியாவின் டக்கார் ராலியாக வர்ணிக்கப்படும் மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளை உங்கள் கண் முன்னே நிறுத்தும் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
MapmyIndia Launches GPS Tracking Device For Motorcycles.
Please Wait while comments are loading...

Latest Photos