அதிக ஆற்றல், அதீத செயல்திறன்: சென்னையில் தயாராகி வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்..!!

Written By:

அதிக செயல்திறன் மற்றும் ஆற்றலை வழங்கக்கூடிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளுக்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன.

இந்திய ராயல் என்ஃபீல்டு தலைவர் சித்தார் லால், இதுகுறித்த தகவலை ஒரு பத்திரிக்கை நிகழ்ச்சியின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் முற்றிலும் இந்தியாவில் தயாராகி வருகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் சென்னையில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது.

ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு என இருவேறு சாலை அமைப்புகளிலும் இதனை நாம் ஓட்டமுடியும். அதற்கேற்றவாறான செயல்திறனோடு ஹிமாலயன் தயாராகி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் 750சிசி திறன் கொண்ட பேரலல் ட்வின் மோட்டார் எஞ்சின் உள்ளது.

உலகில் தயாரிக்கப்படும் அதிவேக வாகனங்களுக்கு இணையான ஒரு செயல்திறனை இதனால் வழங்க முடியும்.

750சிசி திறன் கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் 50 பி.எச்.பி பவர் மற்றும் 60 முதல் 65 வரையிலான டார்க் திறனை வழங்கும்.

750சிசி திறனோடு இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் இதுநமக்கு இன்னும் கூடுதல் பெருமையாகும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் போலவே, கான்டினெட்டல் ஜி.டி மாடல் மோட்டார் சைக்கிளுக்கு உலகளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

ட்வின் சிலிண்டர் எஞ்சின் கொண்ட அந்த பைக் இந்தாண்டு இத்தாலி நாட்டில் நடக்கவுள்ள மோட்டார் கண்காட்சியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிமாலயன் பைக்கை பொறுத்தவரை, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுச்சூழலுக்கான 4 விதிகளையும், இந்தியாவில் பி.எஸ்.4 மாசு விதிகளையும் பூர்த்தி செய்வது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு பெரிய சவாலாக இருக்கும்.

இந்தியா மட்டுமில்லாமல், உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு 750சிசி ஹிமாலயன் 2018ம் ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Royal Enfield to accommodate the new engine inside the More powerful Royal Enfield Himalayan. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos