புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இன்று 5 புதிய உயர் வகை பைக் மாடல்களை கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதில், புதிய கவாஸாகி இசட்900 பைக் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

இதுவரை விற்பனையில் இருந்து வந்த கவாஸாகி இசட்800 பைக்கிற்கு மாற்றாக புதிய இசட் 900 பைக் மாடலை கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக் மாடலின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை விரிவாக காணலாம்.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

புதிய கவாஸாகி இசட்900 பைக் நேக்கட் ஸ்டைல் வடிவமைப்பில் வந்துள்ளது. கவாஸாகி இசட்1 மற்றும் ஜிபிஇசட்900ஆர் ஆகிய பைக்குகளின் டிசைன் தாத்பரியங்களும் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

இந்த புதிய பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 948சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 124 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. பழைய இசட்800 மாடலைவிட இது 12 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

இசட்800 பைக் 210.5 கிலோ எடை கொண்டது. ஆனால், இந்த புதிய மாடல் 20.5 கிலோ எடை குறைவானது. இதனால், ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர நிலைகளில் எஞ்சின் செயல்திறன் மிகச் சிறப்பாக இருக்கும்.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

இந்த பைக்கில் விரைவாக கியர்களை குறைப்பதற்கான ஸ்லிப்பர் க்ளட்ச் தொழில்நுட்பம் இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

முன்புறத்தில் 41மிமீ அளவுடைய அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. பின்புறத்தில் உள்ள மோனோ ஷாக் அப்சார்பரை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் முடியும்.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

அதேபோன்று, முன்புறத்தில் 300மிமீ இரட்டை டிஸ்க்குகளுடன் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஒரு பிஸ்டன் காலிபருடன் 250மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் இலகு எடையுடன் கூடிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அலுமினியம் ஸ்விங் ஆர்ம் இருப்பதால், எடை வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

சிறப்பான பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, தாழ்வான இருக்கை அமைப்பு, தட்டையான கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருப்பதால், கையாளுமை மிகச் சிறப்பாக இருக்கும்.

 புதிய கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

புதிய கவாஸாகி இசட் 900 பைக் ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பழைய இசட்800 மாடலைவிட இது ரூ.1.20 லட்சம் வரை விலை அதிகம். இருப்பினும், 4 சிலிண்டர்கள் எஞ்சின் கொண்ட பைக் மாடல்களில் இது குறைவான விலை கொண்ட மாடலாக இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2017 Kawasaki Z900 launched in India. The all-new Z900 is positioned below the Z1000 and will be a more profitable trade-off to the current Ninja 650/Er-6n customers. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X