மின்சார கார் முதல் ரோபோக்கள் வரை; ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்ய அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்!

எலெக்ட்ரானிக் பொருட்களை ஒயர்களின்றி சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

By Azhagar

எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு ஒயர்களை இணைக்காமல், சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

இந்த தொழில்நுட்பத்தால் கைப்பேசி, லேப்டாப் போன்றவை மட்டுமின்றி மின்சார கார்களின் பேட்டரிகளை கூட சார்ஜ் செய்ய முடியும் என அந்த விஞ்ஞானிகள் குழு தெரிவிக்கிறது.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

இவை பயன்பாட்டிற்கு வந்தால், மின்சார கார்கள் இயக்கத்தில் இருக்கும்போதே மேலும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும்.

இதனால் தூரம், பண விரயம் போன்ற இடர்பாடுகள் தவிர்க்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

மின்சார ஆற்றலை ஒயர்களின்றி எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு கடத்தும் இந்த தொழில்நுட்பத்திற்காக ஸ்டான்ஃபோர்டு விஞ்ஞானிகள் குழு கடுமையாக முயன்று வருகிறது.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

இந்த குழுவில் உள்ள பேராசியார் ஷான்ஹூய் ஃபேன், "மின்சார கார்கள், கைப்பேசி ஆகியவற்றை விட, ஒயர்களின்றி சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ரோபோக்கள் தயாரிப்பிற்கு கூட உதவும்" என்று கூறுகிறார்.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளில் ஒரு மெகா வால்ட் திறனில் எல்.இ.டி விளக்கிற்கான மின்சாரத்தை ஒயர்களின்றி கடத்தி இக்குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

இதை முதல்நிலையாக வைத்து மின்சார கார்களுக்கு ஏதுவாக, பலநூறு கிலோ வால்ட் மின் ஆற்றலை கடத்தும் சார்ஜரை உருவாக்க மேலும் தீவிர முயற்சிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

மின்சார ஆற்றலை வழங்கும் சாதனத்திடம் இருந்து மின்சாரத்தை பெறும் பொருட்களுக்கு உள்ள தொலை தூரத்தை நீடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

மின்சார கார்களில் உள்ள பேட்டரிக்களை பிளக்-இன் செய்து சார்ஜ் செய்யும் முறையை கூட இது மாற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார் பேராசியர் ஃபேன்.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

மின்சார கார்களில் பொறுத்தப்படும் காயில்கள், ஒயர்களில்லாமல் பெறும் மின்சாரத்தை தக்கவைத்துக்கொள்ளும்.

இந்த தொழில்நுட்பம் சாத்தியமாக்கப்பட்டால் மின்சார கார்கள் சாலையில் இருக்கும்போதே அதை சார்ஜ் செய்யலாம்.

இனி ஒயரின்றி பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்..!!

ஓட்டுநரின்றி இயங்கும் வாகனங்கள், ஒயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யும் முறை ஆகியவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் என ஆட்டோமொபைல் உலகிலுள்ள வல்லுநர்கள் பலர் கருதுகின்றனர்.

Most Read Articles
English summary
Stanford scientists have developed a way to wirelessly deliver electricity to moving objects. Click for Details...
Story first published: Monday, June 19, 2017, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X