இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள சுசுகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை மற்றும் விவரங்கள்..!

Written By:

சுசுகி நிறுவனத்தின் தொடக்க விலை ஸ்போர்ட்ஸ் பைக்கான ஜிக்ஸர் 250 பைக்கின் விலை மற்றும் அறிமுகம் குறித்த தலவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல சுசுகி நிறுவனம் புதிய ஜிஎஸ்எக்ஸ்250 ஆர் என்ற பைக்கை கடந்த ஆண்டு சீனாவில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியது.

இரட்டை சிலிண்டர்கள் கொண்ட இந்த பைக் சமீபத்தில் இங்கிலாந்திலும் அறிமுகமாகியுள்ளது.

இதனையடுத்து இந்த பைக் விரைவில் இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் 250 என்ற பெயரில் அறிமுகாக உள்ளது.

இதனையடுத்து இந்த பைக் விரைவில் இந்தியாவில் சுசுகி ஜிக்ஸர் 250 என்ற பெயரில் அறிமுகாக உள்ளது.

ஸ்போர்ட்ஸ் பைக்குக்கே உரித்தான சிறப்பான கவர்ச்சிகரமான தோற்றத்தை இந்த பைக் பெற்றுள்ளது.

ஸ்பிலிட் சீட்கள் கொண்ட இந்த புதிய பைக்கின் செயின் அமைப்பு வெளியில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுசுகி நிறுவனத்தின் பிரதான மாடலான ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஸ்டைலிங்கை இந்த பைக் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜிக்ஸர் 250 பைக்கில் மல்டி ஃபங்கஷனல் டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓடோமீட்டர், கியர் இண்டிகேட்டர், டிஸ்பிளே ஃபியூயல் கேஜ், இரண்டு டிரிப் மீட்டர்கள்.

சர்வீஸ் மற்றும் ஆயில் சேஞ்ச் இண்டிகேட்டர், கடிகாரம், ஃபியூல் பயன்பாடு குறித்த தகவல் தெரிந்து கொள்தல் என எண்ணற்ற வசதிகள் இதில் நிரம்பியுள்ளது.

இந்த புதிய பைக்கில் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கம் 7 வகையில் மாற்றியமைத்துக்கொள்ளும் மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல இதன் முன்பக்கம் 290 மிமீ கொண்ட நிசின் சிங்கில் பெடல் டிஸ்க் மற்றும் பின்பக்கம் 240 மிமீ பெடல் டிஸ்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஜிக்ஸர்250 பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 248சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது.

இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 24.66 பிஹச்பி ஆற்றலையும், 6,500 ஆர்பிஎம்-ல் 23.4 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240 கிமீ. 15 லிட்டர்கள் அளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ள இந்த பைக்கின் எடை 178 கிலோவாகும்.

சமீபத்தில் இங்கிலாந்தில் அறிமுகமான இந்த பைக் அங்கு 3.5 லட்ச ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது.

இந்தியாவில் இந்த பைக் ரூ.3.1 லட்சம் என்ற விலையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜிக்ஸர்250 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது சுசுகி நிறுவனம்.

வெளிநாடுகளில் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட ஜிக்ஸர்250 பைக்குகளே இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

யமஹாவின் ஆர்3, கவாஸாகி நிஞ்சா300 மற்றும் பெனெல்லி டார்னாடோ302 ஆர் பைக்குகளுக்கு ஜிக்ஸர்250 பைக் போட்டியாக அமையும்.

உள்நாட்டிலேயே இந்த பைக்குகள் தயாரிக்கப்பட்டால் சவாலான விலையை சுசுகி நிர்னயிக்கலாம். அப்போது நல்ல வரவேற்பையும் இந்த பைக் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்எக்ஸ் 250ஆர் என்ற ஜிக்சர்250 சுசுகி பைக் பற்றிய சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வீடியோவை மேலே காணுங்கள்.

English summary
Read in Tamil about suzuki gixxer250 india bike launch details and price details revealed.
Please Wait while comments are loading...

Latest Photos