பஜாஜ் அவென்ஜர் விற்பனையை கவிழ்க்க சுசுகி இந்தியாவின் கேமிங் பிளான்... முழுத் தகவல்கள்..!!

Written By:

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பயணிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில், மேலும் சந்தையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து பைக்அட்வைஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, சுசுகி நிறுவனம் ஜி.இசட் 150 க்ரூஸர் மோட்டர்சைக்கிளை இந்தியாவில் களமிறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

150சிசி சந்தையில் சுசுகியின் ஜிக்ஸெர் பைக் மாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது சுசுகி அடுத்ததாக 250சிசி திறன் பெற்ற மாடல் பைக்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் அவென்ஜர் போன்ற க்ரூஸர் பைக்கிற்கு இந்திய சந்தை அதீத வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

க்ரூஸர் பைக்கிற்கான சந்தையில் சாவாலினை உருவாக்க தற்போது சுசுகி ஜிஇசட் 150 மாடலை களமிறக்கும் முடிவில் சுசுகி உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் 150சிசி மற்ற்றும் 220சிசி திறன்களில் பஜாஜ் அவென்ஜருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு போட்டியாக ஜி.இசட் 150 பைக்கை இந்தியாவில் சுசுகி களமிறக்கினால் அது வர்த்தக ரீதியாக பெரிய போட்டியாக அமையும்.

ஜி.இசட் 150 பைக்கின் எஞ்சின் 149சிசி சிங்கள் சிலிண்டர் கொண்டது. இதன்மூலம் 11.5 பிஎச்பி பவர் மற்றும் 11.2 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

எஞ்சினின் ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்த இதில் 5-ஸ்பீடு கியர்பாஸ் பொறுத்தப்பட்டுள்ளது. முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் அப் முறையில்,பின் பக்கத்தில் டிரம் பிரேக் முறையிலும் இதன் நிறுத்த அமைப்பு உள்ளது.

சுசுகி இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முடிவில் அதிகாரப்பூர்வமாக இருந்தால் இந்தியாவில் இதன் விலை ரூ.1 லட்சம் வரை விலை மதிப்பை பெறும்.

வட்ட வடிவத்திலான முகப்பு விளக்கு, கிளாசிக்கான பைக்கின் கட்டமைப்பு மற்றும் க்ரூஸ் ரக வாகனங்களுக்கே உரித்தான ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கைகள் என சுசுகி ஜி இசட் 150 சாப்பர் மாடலகாவும் உள்ளது.

2250மிமீ நீளத்தில், 900மிமீ அகலத்தில், 1160மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஜி.இசட் 150 பைக். மொத்தம் 140 கிலோ எடையில் 710மிமீ உயரத்தில் மிரட்டும் தோற்றத்தில் உள்ளது இது.

பைக்கின் முன்பறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் வழங்கப்பட்டு, பின்புறத்தில் ஷாக் அப்ஸ்பர்கள் உள்ளன. இதனால் இதனுடைய சஸ்பென்ஷன் சிறந்தவையாக இருக்கும் என்று தெரிகிறது.

கொலம்பியா, வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மிக ஜோரான விற்பனை திறனை இந்த பைக் பெற்றுள்ளது.

விற்பனை ஆகும் நாடுகளில் எல்லாம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.89,000 விலையை பெற்றுள்ள இந்த பைக், இந்திய சந்தைக்கு வந்தால் ரூ. 82,000 முதல் ரூ. 87,000-குள் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்படும்.

சுசுகி ஜி.இசட் 150-யின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டால், அதனுடைய விலைக்கூட பஜாஜ் அவென்ஜருக்கு மிகப்பெரிய நெருக்கடியை சந்தையில் ஏற்படுத்தும்.

நமக்கு கிடைக்கும் தகவலின்படி சுசுகி டீலர்கள் சிலர் ஜி.இசட் பைக்கிறகான விற்பனையை உருவாக்க தற்போதே ஆய்த்தமாகி வருகின்றனர் என்றும்,

சுசுகி நிறுவனத்திற்கு எஞ்சின் ஆயிலை சப்ளை செய்யும் மோதுல் என்ற நிறுவனம் ஏற்கனவே ஜி.இசட் 150-க்கான தேர்வுகளை ஆராய்ந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனிடையே சுசுகி ஜி.இசட் 150 பைக்கை இந்தாண்டு செப்டம்பரில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கிய பிறகு க்ரூஸர் மாடலுக்கான தேவைகளை மாற்றியமைக்கும் திறனை ஜி.இசட் 150 உருவாக்கும் என்பது ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

பஜாஜ் நிறுவனத்திற்கு போட்டியாக க்ரூஸர் ரக மாடலை சுசுகி வெளியிட்டால், விலையில் பெரியளவிலான மாற்றம் இருக்கலாம்.

இது நிச்சயம் இந்தியாவில் க்ரூஸர் ரக பைக்கை வாங்குபவர்களுக்கு முத்தாய்ப்பான வாய்ப்பாக அமையும்.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: Suzuki Motorcycle may launch the GZ150 cruiser motorcycle in India. Click for Details...
Story first published: Sunday, July 16, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos