ஸ்லிங் ஷாட், ஸ்விஷ் ஸ்கூட்டர் மாடல்களை கைவிடுகிறது சுசுகி நிறுவனம்?

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் ஸ்லிங்ஷாட் மற்றும் ஸ்விஸ் ஸ்கூட்டர் மாடல்களை கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்திய பிரிவான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், அதன் 'ஸ்லிங் ஷாட்' 125சிசி மோட்டார்சைக்கிள் மற்றும் 'ஸ்விஷ்125' ஸ்கூட்டர் ஆகிய மாடல்களை கைவிடுவதாக தெரிய வருகிறது.

சமீபகாலமாக இந்த இரண்டு மாடல்களின் விற்பனை சரிவை சந்தித்து வந்தது, மேலும் ஒற்றை இலக்க அளவிலேயே விற்பனை நடந்துவந்த காரணத்தால் சுசுகி நிறுவனம் இந்த முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

2010ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்லிங் ஷாட் மோட்டார்சைக்கிளின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. 

இந்த செக்மெண்டில் உள்ள இதர நிறுவன பைக்குகள் தோற்றத்திலும், செயல்திறனிலும் இதனை விட சிறந்து விளங்குவதால் ஸ்லிங் ஷாட் பைக் மாடல் கைவிடப்படுவதாக தெரியவருகிறது.

இதேபோல ஸ்விஷ் ஸ்கூட்டரை கடந்த 2015ஆம் ஆண்டில் கடைசியாக மேம்படுத்தி வெளியிட்டது சுசுகி நிறுவனம், இதன் விற்பனையும் சமீபத்தில் சரிவை சந்தித்து வந்தது.

மேலும் இந்நிறுவனத்தின் ஆக்ஸஸ்125 ஸ்கூட்டர் விற்பனையில் சிறந்து விளங்குவதால் ஸ்விஷ் ஸ்கூட்டர் மாடல் நிறுத்தப்படுகிறது.

தற்போது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள அதன் மாடல்கள் பட்டியலில் இருந்து இந்த இரண்டு மாடல்களையும் அதிரடியாக நீக்கியுள்ளது சுசுகி நிறுவனம்.

சுசுகி ஸ்லிங் ஷாட் பைக்கில் 125சிசி இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.5 பிஹச்பி ஆற்றலையும், 10 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த பைக் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருகிறது.

சுசுகி ஸ்விஷ் ஸ்கூட்டரில் 125சிசி இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.5 பிஹச்பி ஆற்றலையும், 9.8 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த பைக் லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தருகிறது.

இந்தியாவில் சுசுகி நிறுவனம் ஜிக்ஸர் சீரீஸ் மற்றும் ஹயத் மோட்டார்சைக்கிள்களையும், ஆக்ஸஸ் மற்றும் லெட்ஸ் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து வருகிறது.

இது மட்டுமல்லாமல் சூப்பர் பைக்கான ஹயபூசா மாடலை கம்ப்ளீட் நாக்ட் டவுன் கிட் எனப்படும், உதிரி பாகங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து (Completly Knocked Down kit) இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம்.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Suzuki discontinues slingshot motorcycle and swish125 scooter models in india.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK